ADDED : மே 11, 2026 04:50 PM
மதுரை: மதுரை புதுார் எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப வளர்ச்சி நிலைய விரிவாக்க மையத்தில், மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் இளைஞர்களுக்கு சான்றிதழுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கும் பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன.
தங்கநகை மதிப்பீடு பயிற்சி மே 18 –22 வரை அளிக்கப்படுகிறது. கட்டணம் ரூ.8,500. மெஹந்தி டிசைன்ஸ், கோன் தயாரிக்கும் நுட்பங்கள் போன்ற பயிற்சி மே 15 – 17 வரை நடக்கிறது. கட்டணம் ரூ.750. சிறுதானிய உணவு மிக்ஸ் தயாரிக்க செயல்முறை விளக்கங்களுடன் பயிற்சி மே 23,24ல் அளிக்கப்படுகிறது. கட்டணம் ரூ.3000. காஸ்மெடிக் பொருட்கள் தயாரிக்க மே 30,31ல் நடக்கும் பயிற்சிக்கு கட்டணம் ரூ.3540.
மேற்கண்ட பயிற்சிகளில் பத்தாம் வகுப்பு முடித்த 18 வயது நிரம்பிய இருபாலர் சேரலாம். காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள், பாஸ்போர்ட் போட்டோக்கள், ஆதார் அட்டை, கல்வித் தகுதி நகல்கள், எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினராக இருந்தால் ஜாதிச் சான்றிதழ் நகல் கொண்டு வரவேண்டும். விபரங்களுக்கு 86956 46417.
