ADDED : மே 14, 2024 06:24 AM

அ நிறம் | அளவு
மதுரை : மதுரை கலைஞர் நுாலகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு குழந்தைகளுக்கு அறிவியல் வகுப்புகள், பாடுதல், விளையாட்டு போட்டி, தென்னங்கீற்றில் பொம்மைகள் செய்யும் பயிற்சி, ஓவியம் போன்ற இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
ஒருங்கிணைப்பாளர் அங்கமுத்து கூறியதாவது: ஒவ்வொரு வகுப்பிலும் 150 குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொள்வர். 8 முதல் 11 வயது குழந்தைகள் பங்கேற்கும் இப்பயிற்சி மே இறுதிவரை நடக்கிறது. குறும்படம் எடுத்தல், கதை எழுதுவது எப்படி போன்ற பயிற்சிகளில் 18 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கின்றனர். பெற்றோரும் ஆர்வமாக குழந்தைகளுடன் சேர்ந்து கற்றுக் கொள்கின்றனர்.
இப்பயிற்சியில் பங்கேற்க ஆன்லைனில் கலைஞர் நுாலக இணைய தளத்தில் (kalaignar centenarylibrary.org) முன்பதிவு செய்ய வேண்டும். பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
