/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வெயிலுக்கு ஏற்றது ‛சம்மர் கட்' தோல்நோய் பிரிவு டாக்டர் அறிவுரை
/
வெயிலுக்கு ஏற்றது ‛சம்மர் கட்' தோல்நோய் பிரிவு டாக்டர் அறிவுரை
வெயிலுக்கு ஏற்றது ‛சம்மர் கட்' தோல்நோய் பிரிவு டாக்டர் அறிவுரை
வெயிலுக்கு ஏற்றது ‛சம்மர் கட்' தோல்நோய் பிரிவு டாக்டர் அறிவுரை
ADDED : மே 04, 2024 01:46 AM
மதுரை:‛கோடை வெயிலில் தலையில் அதிக முடி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக ‛சம்மர்கட்' எனப்படும் முடியை ஒட்ட வெட்டலாம்' என மதுரை அரசு மருத்துவமனை தோல்நோய் பிரிவு துறைத்தலைவர் டாக்டர் முருகன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
தலையில் அதிக முடி இருந்தால் வியர்த்து வியர்வை துவாரங்கள் அடைபட்டு சீழ், கொப்புளம், வேனல் கட்டி உருவாகலாம். தலையில் எண்ணெய் பசை அதிகமாக சுரக்கும் போது எந்த சீசனாக இருந்தாலும் பொடுகுத்தொல்லை ஏற்படும். இதற்கு சிகிச்சை உள்ளதால் பயப்பட தேவையில்லை.
பெரியவர்களை விட குழந்தைகளுக்கு வியர்க்குரு அதிகமாக வரும். காற்றோட்டமான அறையில் வசிப்பதோடு பருத்தி ஆடை அணிய வேண்டும். தினமும் இருமுறை குளிக்க வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.
வெயிலில் அலைபவர்களுக்கு முகத்தில் கருமை ஏற்படும். ‛சன் ஸ்கிரீன்' கிரீம் அதிகபட்சம் 2 மணி தாங்கும். அதனால், 2 மணி நேரத்திற்கு ஒருமுறை பூசினால் தான் முழுமையான வெயிலில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.