/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம் பின்பற்றப்படுகிறதா உயர்நீதிமன்றம் கேள்வி
/
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம் பின்பற்றப்படுகிறதா உயர்நீதிமன்றம் கேள்வி
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம் பின்பற்றப்படுகிறதா உயர்நீதிமன்றம் கேள்வி
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம் பின்பற்றப்படுகிறதா உயர்நீதிமன்றம் கேள்வி
ADDED : ஜூலை 07, 2024 02:30 AM
மதுரை: பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை சட்டம் பின்பற்றப்படுகிறதா என மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தென் மாவட்டத்திலுள்ள ஒரு அரசு மருத்துவக் கல்லுாரியில் உதவி மருத்துவ அலுவலர் பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக்கூறி முதல்வர் சஸ்பெண்ட் செய்தார். இதை எதிர்த்து உதவி மருத்துவ அலுவலர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா: ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பை ஆதரித்ததற்காக மற்றொரு டாக்டரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அதை எதிர்த்து அவர் வழக்கு தாக்கல் செய்தார். அது நிலுவையில் உள்ளது. அவருக்கும் தனக்கும் முதல்வரால் தேவையற்ற பிரச்னை உண்டாக்கப்பட்டது; தன்னை சஸ்பெண்ட் செய்துள்ளதாக உதவி மருத்துவ அலுவலர் கூறுகிறார்.
பொய்யான மற்றும் மூன்றாம் தரப்பினரால் புனைப்பெயரில் அளிக்கப்பட்ட புகார்களுக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுத்து சஸ்பெண்ட் செய்தல் போன்ற கடும் நடவடிக்கைகள் முதல்வரால் எடுக்கப்பட்டுள்ளன. வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இதை சரியான முறையில் மதிப்பிட்டு மனுதாரருக்கு எதிரான சஸ்பெண்ட் உத்தரவை அரசு ரத்து செய்தது.
பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் சட்டம் அனைத்து பணியிடங்களிலும் பின்பற்றப்படுகிறதா குறித்து நியாயமான மதிப்பீடு தேவை. அதன் நோக்கங்களை அடைவதில் தடைகள் உள்ளதா, தடைகள் எதனால் ஏற்படுகிறது, முன்னோக்கி செல்லும் வழி என்ன, சிறப்புச் சட்டம் கொண்டு வந்த பின்னரும் உண்மையான முன்னேற்றம் ஏற்படவில்லை எனில் அவசர நடவடிக்கைகள் தேவை.
தமிழக சமூக நலத்துறை செயலர், மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை செயலர், தேசிய மற்றும் மாநில மகளிர் கமிஷன் தலைவர்கள் ஜூலை 15 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.