ADDED : ஜூலை 18, 2024 04:12 AM
திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றம் ஐயப்பன்தாங்கல் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் அப்பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி ஐயப்பன் கோயில் சந்திப்பு, வி.ஐ.பி., நகர், செங்குன்றம் நகர் 2, 3, 6 தெருக்கள், திருவள்ளுவர்நகர், கோல்டன் சிட்டி, ஓம் முருகா நகர் சந்திப்பு ஆகிய பகுதிகளில் ரூ.1.50 லட்சத்தில் 18 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
அக்கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறையை திருப்பரங்குன்றம் போலீஸ் உதவி கமிஷனர் குருசாமி திறந்து வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் மதுரை வீரன், முருகன், எஸ்.ஐ., க்கள் கார்த்திகேயன், அய்யாதுரை, மகேஸ்வரன், குடியிருப்போர் சங்கத் தலைவர் ஜெயபாலன், செயலாளர் மோகன், கவுரவ தலைவர்கள் ராஜேந்திரன், குமார், சுமங்கலாதேவி, துணைச் செயலாளர்கள் கணேசன், விஜயகுமார், நாராயணசாமி, செயற்குழு உறுப்பினர்கள் பாண்டிவேல், பாலகிருஷ்ணன், அழகர்ராஜா, நாகராஜன், அமிர்தராஜ், பிரகாஷ், ஜெயகரன், செந்துார் பாண்டியன் பங்கேற்றனர்.

