/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வெயில், மழையால் பாதிக்கும் சுவாமி வீதி உலா வாகனங்கள்
/
வெயில், மழையால் பாதிக்கும் சுவாமி வீதி உலா வாகனங்கள்
வெயில், மழையால் பாதிக்கும் சுவாமி வீதி உலா வாகனங்கள்
வெயில், மழையால் பாதிக்கும் சுவாமி வீதி உலா வாகனங்கள்
ADDED : மே 01, 2024 07:40 AM

மேலுார் : திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்மன் கோயிலில் சுவாமி உலா வாகனங்கள் வெயில், மழையால் பொலிவிழந்து வருகின்றன. அந்த வாகனங்களை பாதுகாக்கும் அறைகள் குப்பை கிடங்காக உள்ளன.
ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ் உள்ள இக்கோயில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. வாயு தேவன் வழிபட்டதால் 'வாதவூர்' என்ற பெயர் பெற்றது. மகாசிவராத்திரி, நவராத்திரி, வைகாசி திருக்கல்யாணம் என 9 மாதம் திருவிழாக்கள் இங்கு நடக்கும். அப்போது சுவாமியும், அம்மனும் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். ஆனால் இவ்வாகனங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் பராமரிக்கவில்லை.
பக்தர்கள் கூறியதாவது: திருவிழாக்களில் ரிஷப, சிம்ம, காமதேனு, குதிரை, மயில் வாகனங்களில் சுவாமி எழுந்தருளுவார். திருவிழா காலங்கள் தவிர்த்து பிற நாட்களில் வாகனங்களை பாதுகாக்க கோயிலில் வாகன காப்பக அறை உள்ளது.
அதை பராமரிக்காததால் குப்பை கிடங்காக மாறிவிட்டது. வாகனங்கள் அனைத்தும் வெயில், மழையால் சிதிலமடைகின்றன என்றனர்.