ADDED : செப் 02, 2024 01:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: இந்திய பள்ளிகள் விளையாட்டு சங்கம் சார்பில் மதுரை எல்லீஸ் டேபிள் டென்னிஸ் அகாடமி மாணவர்கள் தமிழக அணி சார்பில் ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் நடந்த 9வது தேசிய திறந்தநிலை டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றனர்.
ஆடவர் 11 வயது பிரிவில் சபரீஷ், 12 வயது பிரிவில் சந்தோஷ்குமார், 14 வயது பிரிவில் லட்சுமி நாராயணன், 17 வயது பிரிவில் தருண்குமார் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர். பயிற்சியாளர் சுந்தர், அகாடமி செயலாளர் பாலகிருஷ்ணன் பாராட்டினர்.