நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம், : மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி தமிழ்த் துறை சார்பில் தமிழ் இலக்கிய பெருவிழா கொண்டாடப்பட்டது. பேராசிரியர் லட்சுமி இறைவணக்கம் பாடினார். செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். துறைத்தலைவர் குபேந்திரன் வரவேற்றார். முதல்வர் சீனிவாசன் துவக்கி வைத்தார். பேராசிரியர் முத்தமிழ் செல்வி அறிமுக உரையாற்றினார். மதுரை காமராஜ் பல்கலை தமிழ் ஒப்பிலக்கியத் துறை தலைவர் சுமதி, குறும்பட இயக்குனர் ஆதித்யா மகேந்திரன், சிறுகதை எழுத்தாளர் தாமோதரன் பேசினர்.
முன்னாள் தமிழ்த் துறை தலைவர் சித்ரா நிறைவுரையாற்றினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் பரிசு வழங்கினார். பேராசிரியர்கள் ஜீவப்பிரியா, விஜயகுமார், சிவக்குமார், கவிதா, நந்தினி ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் ஊர்மிளா நன்றி கூறினார்.