/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை விமான நிலைய பணிக்கு தமிழக அரசு ரூ.90 கோடி ஒதுக்கணும்; ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

ADDED : மார் 01, 2025 04:22 AM
அவனியாபுரம் : 'தமிழக அரசு ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்தால்தான் மதுரை விமான நிலைய விரிவாக்க பணி வேகம் எடுக்கும்' என மாணிக்கம் தாகூர் எம்.பி., தெரிவித்தார்.
விமான நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. எம்.பி., க்கள் மாணிக்கம் தாகூர், வெங்கடேசன், விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன் மற்றும் தனியார் விமான நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாணிக்கம் தாகூர் கூறியதாவது:
விமான நிலைய முன்னேற்றத்திற்கு 24 மணி நேர சேவை முக்கியமாக பார்க்கப்படுகிறது. இரவு நேர சேவையை விமான நிறுவனங்கள் துவக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். மதுரை -- சிங்கப்பூர் ஏர் இந்தியா விமான சேவை குறித்து அதன் சி.இ.ஓ. வை சந்திக்க உள்ளோம். விமான நிலைய விரிவாக்கத்தில் சின்ன உடைப்பு பகுதி விவகாரம் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
விமான நிலைய விரிவாக்க பகுதியில் நீர்பிடிப்பு பகுதிகள் மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கு தண்ணீர் செல்லும் பிரதான கால்வாயை ரூ. 90 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டம் மூலம் மாற்றுப் பாதையில் அனுப்புவதற்கு முயற்சி செய்தால்தான் அந்த நிலம் முழுமையாக விமான நிலைய நிர்வாக கட்டுப்பாட்டிற்கு வரும்.
முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சரும் வருகிற நிதி ஆண்டிலேயே ரூ. 90 கோடி ஒதுக்கீடு செய்தால்தான் விமான நிலைய விரிவாக்க பணிகளை வேகப்படுத்த முடியும் என்றார்.