/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் 'டாப்' பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் பேச்சு
/
அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் 'டாப்' பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் பேச்சு
அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் 'டாப்' பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் பேச்சு
அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் 'டாப்' பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் பேச்சு
ADDED : ஆக 08, 2024 05:12 AM

மதுரை: அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முக்கிய பங்காற்றி வருவதாக பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் அபரஜித்தா சாரங்கி பேசினார்.
மதுரை மடீட்சியாவில் மத்திய பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் குறித்த விளக்கக் கூட்டம் நடந்தது. தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்து வரவேற்றார். பட்ஜெட் பற்றிய நிறை, குறைகளை எடுத்துக் கூறி, குறு, சிறு தொழில் முனைவோர்களின் ஆலோசனைகளை அபரஜித்தா சாரங்கி கேட்டறிந்தார்.
அவர் பேசியதாவது:
மடீட்சியா குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்காக 50 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறது. நம் நாடு 2027க்குள் பொருளாதாரத்தில் உலகளவில் 3ம் இடத்தை அடையவும், 2047க்குள் வளர்ந்த நாடாக உருவெடுக்கவும் இந்த பட்ஜெட் வழிவகுக்கும். அதிக மூலதனச் செலவு, அதிக சமூக நல நிதி, வளர்ச்சி இலக்கை வலுவாக வைத்தல், நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்தல் உள்ளிட்டவற்றில் இந்த பட்ஜெட் கவனம் செலுத்துகிறது.
கல்வி, வேலைவாய்ப்பு, திறன் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, எம்.எஸ்.எம்.இ., எனும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான ஆதரவு உள்ளிட்டவற்றிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான குறு, சிறு நிறுவனங்கள் உள்ளன. மதுரையில் மட்டும் அவை 25 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளன. மொத்த உற்பத்தியில் 36 சதவீதமும், மொத்த ஏற்றுமதியில் 40 சதவீதமும் குறு, சிறு நிறுவனங்கள் பங்காற்றுகின்றன. அத்தகைய நிறுவனங்களுக்கு மேம்படுத்தப்பட்ட நிதி, ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள், தொழில்நுட்ப ஆதரவு உள்ளிட்டவற்றை இந்த பட்ஜெட் வழங்குகிறது.
முத்ரா கடன் மூலம் 4கோடியே 97 லட்சம்தமிழக மக்கள் இதுவரை பயனடைந்துள்ளனர். இந்தபட்ஜெட்டில் முத்ரா கடன்களுக்கான வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே இது எம்.எஸ்.எம்.இ., க்களுக்கு சாதகமான பட்ஜெட். தற்போது வரை நம் நாட்டில் 110 'யுனிகார்ன்' கம்பெனிகளும், ஒரு லட்சத்தி 17 ஆயிரம் 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகளும் உள்ளன. அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முக்கிய பங்காற்றி வருகிறது என்றார்.
கூட்டத்தில் மடீட்சியா சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீநிவாசன், மடீட்சியா துணைத் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயலாளர் கோடீஸ்வரன் நன்றி கூறினார்.