ADDED : ஜூலை 09, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் தமிழ் உயராய்வு மையம் சார்பில் தமிழ்ப் பேரவை தொடக்க விழா நடந்தது.
முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் காயத்ரிதேவி வரவேற்றார். எழுத்தாளர் சேரை பாலகிருஷ்ணன் ‘தமிழே அமுதே’ என்ற தலைப்பில் பேசினார். உதவிப் பேராசிரியர் முனியசாமி தொகுத்து வழங்கினார். உதவிப் பேராசிரியர் மல்லிகா ஒருங்கிணைத்தார். தமிழ்த் துறை பேராசிரியர்கள், பட்ட ஆய்வாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் திருஞானசம்பந்தம் நன்றி கூறினார்.
