/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்
/
மதுரையில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்
ADDED : செப் 06, 2024 05:16 AM
மதுரை: மதுரை பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடந்தன.
மதுரை லேடி டோக் கல்லுாரியில் 'கடவுளின் பரிசு' என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது. முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். ஜி.எம்.எஸ்., அறக்கட்டறை நிறுவனர் ராஜகுமாரி ஜீவகன் ஆசிரியர்களின் அறப்பணிகள் குறித்து பேசினார். மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவ பேரவை உறுப்பினர்கள் ஏற்பாடு செய்தனர்.
* பீ.பீ.குளம் தனபால் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் தனபால் ஜெயராஜ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் தினேஷ் சேவியர் முன்னிலை வகித்தார். மாணவர் முகமது நபிரான் வரவேற்றார். மாணவி பிரவீணா தொகுத்து வழங்கினார். மாணவி பெமினா நன்றி கூறினார்.
* மதுரை அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் நிர்வாகி முகமது இதிரிஸ் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் ஷேக் நபி முன்னிலை வகித்தார். ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு மாவட்டத் தலைவர் பஷீர் அகமது, வி.எம். சமூக அறக்கட்டளை செயலாளர் குமரன், சமூக ஆர்வலர்கள் பீர் முகமது, அப்துல் ரஹீம், தேசிய லீக் மாநிலச் செயலாளர் ரபீக் அகமது பேசினர். தொன்மை, நவீன தொழில்நுட்பம் சார்ந்த சமூக அறிவியல் கண்காட்சி நடந்தது. ஆர்.சி., நடுநிலைப் பள்ளி மாணவர்கள், பெற்றோர் உள்பட பலர் பார்வையிட்டனர். உதவி தலைமையாசிரியர்கள் ஜாகிர் உசேன், ரஹ்மத்துல்லா, தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாளர் மீர் நாமத்துல்லா இப்ராஹிம் பங்கேற்றனர்.
* ஒத்தக்கடை தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. ஆசிரியர் மோசஸ் வரவேற்றார். மாணவி பைரவியின் பரதநாட்டியம் நடந்தது. மாணவி நித்திலா ஸ்ரீ பேசினார். மாணவர்கள் சார்பில் ஆசிரியர்களுக்கு ரோஜா பூக்கள் கொடுத்து, பாதையில் பூக்கள் துாவி வரவேற்றனர். ஆசிரியர் ரமாபிரபா ஒருங்கிணைத்தார். ஆசிரியை கார்த்திகா தொகுத்து வழங்கினார். ஆசிரியைகள் ராஜேஸ்வரி, ராமலட்சுமி, பிரேமலதா ஏற்பாடு செய்தனர். ஆசிரியை மெர்சி நன்றி கூறினார்.
* எஸ்.பி.ஓ.ஏ., பள்ளிகள் சார்பில் தாளாளர் கணபதி தலைமையில் நடந்தது. ஆசிரியர் மதுமிதா வரவேற்றார். ஆசிரியர் மெர்சி ஜூலியட் தலைமையில் ஆசிரியர்கள் உறுதிமொழியேற்றனர். எஸ்.பி.ஐ.ஓ.ஏ., கல்வி அறக்கட்டளை உறுப்பினர் ராஜசெல்வன், சவுராஷ்டிரா கல்லுாரி முதல்வர் சீனிவாசன் பேசினர். சிறந்த ஆசிரியர்களுக்கு தாளாளர் விருது வழங்கினார். முதல்வர் லதா, தலைமையாசிரியை அனிதா கரோலின், உதவி தலைமையாசிரியர் பொற்கொடி முன்னிலை வகித்தனர். ஆசிரியை ஷாலினி ஜஸ்டினா நன்றி கூறினார்.