ADDED : ஜூலை 05, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
அலங்காநல்லுார், ஜூலை 5-
சின்னஊர்சேரியில் காக்காயன் கருப்புச்சாமி, நல்லபிறவி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஜூலை 3ல் முதற்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை 4ம் காலயாக பூஜையைத் தொடர்ந்து புனித நீர் குடங்கள் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனிதநீரால் அபிஷேகம் செய்தனர். சுவாமி, அம்மன் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சின்ன ஊர்சேரி, பாசிங்காபுரம், அய்யூர், கள்வேலிபட்டி பங்காளிகள் செய்திருந்தனர்.
