
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு : பாலமேடு அருகே மறவபட்டியில் மஞ்சமலை, முத்தாலம்மன் கோயில் பங்குனி பொங்கல் உற்ஸவம் 5 நாட்கள் நடந்தன.
தினமும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் அலகு குத்தி, அக்னிசட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.
மஞ்சள் நீராட்டு விழாவை தொடர்ந்து அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

