நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: சேக்கிபட்டி முத்தாலம்மன் கோயில் மாசித் திருவிழா நேற்று துவங்கியது.
மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவின் முதல் நாளான நேற்று பச்சை மண்ணால் செய்த அம்மன் தேரில் கோயிலில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (மார்ச் 6) கோயிலில் உள்ள அம்மன் பூஞ்சோலைக்கு செல்வார். பின்னர் பக்தர்கள் செண்பக விநாயகர் கோயிலில் இருந்து அக்னி சட்டி, பால்குடம் எடுத்து கிடா வெட்டி பொங்கல் வைப்பர். நாளை மஞ்சுவிரட்டு மற்றும் அன்னதானத்துடன் திருவிழா நிறைவு பெறும்.