ADDED : ஜூலை 16, 2026 11:04 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் அய்யனார்குளம் கிராமத்தில் கோயில் உண்டியல் காணிக்கையை திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
அய்யனார்குளத்தில் கடசாரி நல்லகுரும்பன் கோயில் உள்ளது. ஜூலை 4ல் இக்கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச்சென்றனர். உத்தப்பநாயக்கனுார் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட தாடையம்பட்டி வினோத்குமார், ஆரியபட்டி அஜய் 20, முத்து 22, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் ரூ.13,000 மதிப்புள்ள சில்லரை காசுகள், டூவீலரை பறிமுதல் செய்தனர்.
