/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பணம் கையாடல் செய்த தற்காலிக பணியாளர் கைது
/
பணம் கையாடல் செய்த தற்காலிக பணியாளர் கைது
ADDED : ஜூலை 04, 2024 01:43 AM
ஈரோடு: ஈரோடு, பெருந்துறை சாலையில் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி என்ற, தாய்கோ வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கியில் கடன் பெற விண்ணப்பித்த பயனாளி ஒருவரது கணக்கில், 1.50 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது.
தொகையை பயனாளிக்கு வழங்காமல், கையாடல் நடந்திருப்பதை வங்கி தணிக்கை குழு கண்டறிந்தது.
ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளருக்கு தணிக்கை குழு தகவல் தெரிவித்தது.
கையாடலில் ஈடுபட்ட, வங்கியின் கடன் அனுமதி பிரிவு பொறுப்பாளராக இருந்த, தற்காலிக பணியாளரான கோவை, ராமநாதபுரம் பாரதி நகர் 5வது வீதியைச் சேர்ந்த பாபுராஜ், 50, என்பவர் மீது நடவடிக்கை எடுக்க, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இப்புகார், ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. தலைமறைவான பாபுராஜை போலீசார் தேடி வந்த நிலையில், கோவையில் பதுங்கியிருந்த அவரை, நேற்று ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.