தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அடுத்த வாரம் சித்திரைப் பொருட்காட்சி துவங்கும்

அடுத்த வாரம் சித்திரைப் பொருட்காட்சி துவங்கும்

அடுத்த வாரம் சித்திரைப் பொருட்காட்சி துவங்கும்


ADDED : ஜூன் 04, 2026 09:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 09:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் தேர்தலால் தள்ளிப் போன அரசு சித்திரைப் பொருட்காட்சி அடுத்த வாரம் ஜூன் 8 க்குப் பின்பு துவங்க உள்ளது.

தமுக்கத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையையொட்டி அரசு சித்திரைப் பொருட்காட்சி நடைபெறும். இந்தாண்டு தேர்தல் நடந்ததால் தேர்தல் நடத்தை விதிகளால் பொருட்காட்சி நடக்கவில்லை. தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிந்தபின் மே 23ல் நடத்த தேர்தல் கமிஷன் அனுமதி அளித்தது. புதிய அரசில் அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு தாமதமானது. இதனால் பொருட்காட்சி இந்தாண்டு ஜூன் மாதத்திற்கு தள்ளிப் போகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே மே இறுதியில் இருந்து பொருட்காட்சிக்கான கடைகள், ஜெயன்ட் வீல், ராட்டினம் உட்பட பொழுது போக்கு உபகரணங்களை அமைக்கும் பணிகள் துவங்கின. இப்பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இந்நிலையில் சித்திரைப் பொருட்காட்சியை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதால் ஜூன் 8 அல்லது அதற்கு பின்னர் துவங்கி 45 நாட்கள் நடக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us