/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரயிலில் இருந்து விழுந்த சிறுவன் பலி
/
ரயிலில் இருந்து விழுந்த சிறுவன் பலி
ADDED : ஜூன் 15, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த, கோவையை சேர்ந்த சிறுவன் பலியானான்.
கோவை, கணபதியை சேர்ந்தவர், செல்வி. மகள் மற்றும் மகன் ராம்கி,13 ஆகியோருடன்திருச்செந்துார் கோவிலுக்கு சென்றுள்ளார். தரிசனம் முடிந்து, திருச்செந்துாரிலிருந்து, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
நேற்று காலை, திருப்பூர், விஜயமங்கலம் அருகே வந்தபோது, படியில் நின்றிருந்த ராம்கி, ஓடும் ரயிலிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். பலத்த காயமடைந்த அவர் அதே இடத்தில் பலியானார்.
ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.