தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நுாற்றாண்டு கடந்த திருக்கண் மண்டபம்

நுாற்றாண்டு கடந்த திருக்கண் மண்டபம்

நுாற்றாண்டு கடந்த திருக்கண் மண்டபம்


ADDED : ஏப் 29, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை சித்திரைத்திருவிழாவில் நாளை அதிகாலை வைகையாற்றில் தங்கக்குதிரையில் அழகர் இறங்குகிறார். இதற்காக நேற்று மாலை அழகர்கோவிலில் இருந்து மதுரை புறப்பட்டு, 400க்கும் மேற்பட்ட திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளுகிறார். அதில் ஒன்றுதான் தல்லாகுளத்தில்உள்ள ஆரப்பாளையம் சின்ன மீனாம்பாள் மண்டபம்.

நுாற்றாண்டு கண்ட இம்மண்டபம் குறித்து அதை நிர்வகிக்கும் ஓய்வுபெற்ற தாசில்தார் ரவீந்திரன் கூறியதாவது: அழகர்கோவிலில் இருந்து மதுரை நகர் வரை பல திருக்கண் மண்டபங்கள் உள்ளன. இதில் சில நுாற்றாண்டு பழமையானவை. எங்கள் மண்டபமும் அதில் ஒன்று. ஆண்டுதோறும் எங்கள் மண்டபத்தில் சுவாமியை வரவேற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம்.

குறிப்பாக எதிர்சேவை, தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடு, மலைக்கு திரும்பும்போது ஆயிரக்கணக்கானோருக்கு சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் வழங்கி வருகிறோம். சுவாமி எழுந்தருளும் மண்டபம் என்பதால் அதன் புனிதம் கருதி அசைவ ஓட்டல்களுக்கு வாடகைக்கு விடாமல் பாரம்பரியத்தை காத்து வருகிறோம். அதேசமயம் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு மண்டபம் தந்து உதவுகிறோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us