/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கள்ளந்திரியில் 'மக்களுடன் முதல்வர்' முகாம்
/
கள்ளந்திரியில் 'மக்களுடன் முதல்வர்' முகாம்
ADDED : ஜூலை 12, 2024 04:40 AM
மதுரை: மதுரை கிழக்கு தொகுதி கள்ளந்திரியில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாமை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.
தர்மபுரியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த இம் முகாம் காணொலியில் ஒலிபரப்பப்பட்டது. கலெக்டர் சங்கீதா, கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, டி.ஆர்.ஓ., சக்திவேல், உதவி கலெக்டர் (பயிற்சி) வைஷ்ணவி, எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேசன், பூமிநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா, கிழக்கு ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை, மேலுார் ஆர்.டி.ஓ., ஜெயந்தி, துணை கலெக்டர் சங்கீதா, ஊராட்சி உதவிஇயக்குனர் அரவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: முதல்வரால் துவக்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக கடந்த ஆண்டு டிசம்பர், இந்தாண்டு ஜனவரியில் 24 ஊராட்சிகளில் 97 முகாம்களில் நடந்தது. 38 ஆயிரத்து 441 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது 395 ஊராட்சிகளில் 73 முகாம்கள் ஜூலை 11 முதல் ஆக.,14 வரை நடக்கிறது. இதில் 15 அரசு துறைகள் சார்ந்த 44 சேவைகள் வழங்கப்படும் என்றார்.