/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் தினமலர் ஷாப்பிங் திருவிழா இனிதே நிறைவு
/
மதுரையில் தினமலர் ஷாப்பிங் திருவிழா இனிதே நிறைவு
ADDED : ஆக 06, 2024 07:27 AM

மதுரை : மதுரையில் ஆக.,2 முதல் தினமலர், சத்யா இணைந்து வழங்கிய தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் 2024 வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி நேற்று இனிதே நிறைவு பெற்றது.
நான்கு நாட்கள் நடந்த இக்கண்காட்சியை மேயர் இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்தார். கண்காட்சிக்குள் போத்தீஸ் கேம் ஸோனை மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் திறந்து வைத்தார்.
இவர்களுக்கும் கண்காட்சியை இணைந்து வழங்கிய சத்யா, இணைந்து கரம் கோர்த்த அசோசியேட் ஸ்பான்சர் ஆனந்தா அண்ட் ஆனந்தா, முத்து மெட்டல், கோ ஸ்பான்சர் லட்சுமி கிரைண்டர், அல்ட்ரா பெர்பெக்ட், ஆடியோ ஸ்பான்சர் இன்போ பஸ், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், போலீஸ், போக்குவரத்து போலீஸ், தீயணைப்பு துறையினர், மின்சார வாரியம், கண்காட்சியில் ஸ்டால்கள் அமைத்த நிறுவனங்கள், கண்காட்சிக்கு வந்த மக்கள், அவசர சிகிச்சை உதவி வழங்கிய அப்போலோ, மீனாட்சி மிஷன் மருத்துவமனைகள் என அனைவருக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும் தினமலர் தெரிவிக்கிறது.ஸ்டால்களில் வர்த்தகர்கள் கூறியதாவது:
தினமலர் ஷாப்பிங் திருவிழா என்றாலே மக்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு உள்ளது என்பது நான்கு நாட்கள் குவிந்த மக்கள் கூட்டம் மூலம் தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வருகை எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது. விரும்பிய பொருட்களை தேடி வாங்கினர்.
மக்களின் ஷாப்பிங் ஆர்வம் எங்களை ஆச்சர்யப்படுத்தியது.
இன்னும் சில நாட்கள் கண்காட்சியை நீட்டித்திருக்கலாம்' என்ற ஏக்கம் மக்களிடம் இருந்ததை பார்க்க முடிந்தது. அடுத்தாண்டு மீண்டும் சந்திக்க ஆவலாய் உள்ளோம் என்றனர்.