/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மக்களின் நம்பிக்கையை இழந்த தி.மு.க., அரசு
/
மக்களின் நம்பிக்கையை இழந்த தி.மு.க., அரசு
ADDED : செப் 01, 2024 03:38 AM
திருநக : திருநகரில் அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில் கட்சியினருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர் செல்வகுமார் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பேசியதாவது: தேர்தல் காலங்களில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றியது போலத்தான் முதல்வரின் வெளிநாடு சுற்றுப்பயணத்தை மக்கள் கருதுகிறார்கள். கார் பந்தயத்தால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எது நடந்தாலும் தி.மு.க., கூட்டணி கட்சியினர் வாழ்த்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். மக்கள் விரோதப் போக்கைத்தான் தி.மு.க., ஆட்சி கடைப்பிடித்து வருகிறது.
ஆட்சிக்கு வந்த 750 நாட்களில் 500க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. இளைஞர்கள், மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதை தடுக்க முதல்வர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது தி.மு.க., அரசு என்றார்.