/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிவனடியாரைத் தேடி சிவனே வந்த மாங்கொட்டை திருவிழா துவக்கம்
/
சிவனடியாரைத் தேடி சிவனே வந்த மாங்கொட்டை திருவிழா துவக்கம்
சிவனடியாரைத் தேடி சிவனே வந்த மாங்கொட்டை திருவிழா துவக்கம்
சிவனடியாரைத் தேடி சிவனே வந்த மாங்கொட்டை திருவிழா துவக்கம்
ADDED : மே 13, 2024 06:18 AM
மேலுார் : திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் நேற்று வாஸ்து சாந்தியுடன் வைகாசி மாத 'மாங்கொட்டைத் திருவிழா' துவங்கியது.
திருவிழாவையொட்டி இன்று (மே 13) கொடியேற்றப்படுகிறது. மே 14 முதல் மே 16 வரை சுவாமி வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். முக்கிய நிகழ்ச்சியாக பஞ்சமூர்த்திகளுடன் திருமறைநாதர், வேதநாயகி அம்பாள்
மே 17 ல் மேலுாருக்கு எழுந்தருள்வார். இத்திருவிழா மாங்கொட்டை திருவிழா என்றழைக்கப்படுகிறது.
இவ்விழாவில் மே 20 ல் திருக்கல்யாணம், மே 21 ல் தேரேட்டம் நடைபெறும். மே 22 கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை அறங்காவலர் ருக்மணி, துணை ஆணையர் கிருஷ்ணன், உதவி ஆணையர் யக்ஞநாராயணன் செய்துள்ளனர்.
புராண வரலாறு
ஆங்கிலேயர் காலத்தில் மேலுாரில் சிவனடியார் ஒருவர் இருந்தார். தினமும் 8 கி.மீ. திருவாதவூருக்கு நடந்து சென்று சிவனை தரிசிப்பார். சிவனடியாரின் சீடராக தாசில்தார் ஒருவர் இருந்தார்.
சிவனடியாருக்கு வயதானதால் திருவாதவூர் செல்ல முடியவில்லை. அதனால் தாசில்தார் மேலுாரில் சிவலிங்கம் அமைத்து கொடுத்தும் திருவாதவூர் செல்ல முடியாதது சிவனடியாருக்கு கவலையாக இருந்தது.
சிவனடியார் கனவில் தோன்றிய சிவன், 'நீ இருக்கும் இடத்திற்கு நானே வருவேன்' எனக் கூறியுள்ளார். அதன் நினைவாக இன்றும் திருவாதவூரில் இருந்து சுவாமிகள் மேலுாரில் எழுந்தருள்கிறார்.
அதனால்தான் இன்றும் மேலுார் நுழைவாயில் முதல் மண்டகப்படியில் தாசில்தாருக்கு முதல் மரியாதை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.