/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போலீசுக்கே பாதுகாப்பில்லை இங்கே முதல்வரோ ஜாலி டூரில்
/
போலீசுக்கே பாதுகாப்பில்லை இங்கே முதல்வரோ ஜாலி டூரில்
போலீசுக்கே பாதுகாப்பில்லை இங்கே முதல்வரோ ஜாலி டூரில்
போலீசுக்கே பாதுகாப்பில்லை இங்கே முதல்வரோ ஜாலி டூரில்
ADDED : செப் 05, 2024 04:58 AM
மதுரை: ''தமிழகத்தில் போலீஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை; ஆனால் அத்துறையை வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் ஜாலி டூரில் உள்ளார். இதுதான் தமிழகத்தின் தற்போதைய நிலைமை,'' என, மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சென்னை, கோவை, திருச்சி மாநகராட்சிகளுக்கு தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கிய நிலையில் மதுரையை மட்டும் புறக்கணித்துள்ளது.
இம்மாவட்டத்தில் இரு அமைச்சர்கள் இருந்த போதும் பொது நிதி பெற்றுத்தரவில்லை. அதேநேரம் அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.250 கோடி வழங்கப்பட்டது. நடிகர் விஜய்யின் 'கோட்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதியளிக்காதது இந்த ஆட்சியின் அராஜகத்தை காட்டுகிறது.
அ.தி.மு.க., ஆட்சியில் பழனிசாமி முதல்வராக இருந்தபோது ஆக்கப்பூர்வமான பணிக்காகவும், முதலீடுகளை ஈர்க்கவும் வெளிநாடு பயணம் மேற்கொண்டார். தற்போது முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதாக கூறிக்கொண்டு அமெரிக்காவில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதும், சைக்கிள் ஓட்டுவதும், பல டிசைன்களில் ஆடை அணிவதுமாக நாளிதழ்களில் செய்தி வருகின்றன.
அதை பார்க்கும் போது அவர் ஏதோ ஜாலி டூர் சென்றுள்ளது போல் தெரிகிறது.
தமிழகத்தில் அவரது கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் துறையில் ஒரு பெண் டி.எஸ்.பி.,க்கே பாதுகாப்பு இல்லை. மாநிலத்தில் பள்ளி கல்லுாரிகளில் போதைப்பொருட்கள் பரவல் அதிகரித்துள்ளது. அதை கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை என்றார். மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் சோலை ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.