sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மழை, வெயிலால் மலைக்க வைத்த காய்கறி விலை; வாரச்சந்தையில் வியாபாரம் செய்ய தயக்கம்

/

மழை, வெயிலால் மலைக்க வைத்த காய்கறி விலை; வாரச்சந்தையில் வியாபாரம் செய்ய தயக்கம்

மழை, வெயிலால் மலைக்க வைத்த காய்கறி விலை; வாரச்சந்தையில் வியாபாரம் செய்ய தயக்கம்

மழை, வெயிலால் மலைக்க வைத்த காய்கறி விலை; வாரச்சந்தையில் வியாபாரம் செய்ய தயக்கம்


ADDED : மே 31, 2024 05:25 AM

Google News

ADDED : மே 31, 2024 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : காசு கொடுத்து காய்கறிகளை வாங்கி விட்டு கொஞ்சூண்டு கறிவேப்பிலை, மல்லி, புதினா கேட்டால் கடைக்காரர்கள் முகம் மாறாமல் சந்தோஷமாக கொடுத்த நிலை கடந்த ஒரு வாரமாக மாறிவிட்டது. ஒரு கிலோ மல்லி தழை ரூ.160 முதல் ரூ.200 வரை என்பதால் கொசுறு என்று கேட்டாலே பதறுகின்றனர்.

அக்கினி வெயிலுக்கு முன்பாகவே ஏப். கடைசி, மே துவக்கத்தில் அக்கினியாய் தகித்த வெயில் மனிதர்களை மட்டுமல்ல காய்கறி செடிகளையும் கலங்க வைத்தது. விளைவு செடிகள் பூக்காமல் காய்கறி உற்பத்தி குறைந்தது.

நிலைமை கொஞ்சம் மாறி மழை பெய்ததும் விவசாயிகள் சந்தோஷப்பட்டனர். தொடர்ந்து மழை பெய்து செடியின் சீதோஷ்ண நிலையை கெடுத்தது. பிஞ்சுகள் உதிர்ந்து விழுந்தும் செடிகள் அழுகியும் காய்கறி உற்பத்தி குறைந்தது. இதனால் சீசன் காலத்திலும் வரத்து குறைந்து காய்கறிகளின் விலை இருமடங்காக அதிகரித்து விட்டது.

இதுகுறித்து மதுரை மாட்டுத்தாவணி அனைத்து வியாபாரி கூட்டமைப்பு தலைவர் சின்னமாயன் கூறியதாவது: வெயிலால் வெப்பம் அதிகரித்து செடியில் கிளைகள் விடாமல் அரும்பு, பிஞ்சு வருவது குறைந்து விட்டது. கிளைகள் விடாவிட்டால் பூ, பிஞ்சு உருவாகாது. ஏற்கனவே ஒன்றிரண்டு கிளைகளில் இருந்த பூ, பிஞ்சு தான் காய்ப்புக்கு வருகிறது. அதுவும் திடீர் தொடர் மழையால் வரத்து நின்றது.

இப்போது வெயில் அதிகமாக இருந்தாலும் மறுபடியும் காய்ப்பு காய்க்க 15 நாட்களாகும். மழையால் சில செடிகள் அழுகியிருப்பதால் மாற்று செடிகள் மூலம் பூ பூத்து காய் காய்க்க ஒரு மாதமாகும்.

அதிக வெயில், மழையால் அதிகம் பாதிக்கப்பட்டது மிளகாய், அவரைக்காய், பீன்ஸ், கத்தரிக்காய் தான். ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தான் தக்காளி கிடைக்கிறது. மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூ.30க்கும் சில்லரை மார்க்கெட்டில் கிலோ ரூ.50 வரைக்கும் விற்பனையாகிறது. எலுமிச்சை, பெரிய வெங்காயம் அங்கிருந்து தான் வருகிறது.

பச்சை காய்கறிகள் உள்ளூரிலிருந்து தான் வருகிறது. உருளைக்கிழங்கு கிலோ ரூ.80, முருங்கை பீன்ஸ் ரூ.120 வரை போகிறது. பெல்ட், பட்டை அவரைக்காய் என்றுமில்லாத அளவு கிலோ ரூ.200க்கும், நைஸ் அவரை ரூ.150க்கும் விற்பனையாகிறது. மிளகாய் சுண்டைக்காய் அளவில் தான் கிடைக்கிறது. நல்ல மிளகாய் மொத்த விலைக்கு ரூ.100 தான். சுரைக்காய் சாதாரணமாக கிலோ ரூ.20க்கு விற்கும். இப்போது 3 மடங்கு அதிகமாக விலைபோகிறது. மாங்காய் உள்ளூர் வரத்து என்பதால் கல்லாமை கிலோ ரூ.30, நாட்டு காய் ரூ.20க்கு கிடைக்கிறது. இஞ்சி, மல்லி நேற்று முன்தினம் ரூ.200க்கு விற்கப்பட்டது. இரண்டும் நேற்று ரூ.160ஆக குறைந்தது.

மொத்த மார்க்கெட்டிலேயே காய்கறிகளின் விலை அதிகம் என்பதால் சில்லரை வியாபாரிகள் மிகக்குறைந்த அளவிலேயே காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். விலை அதிகமாக இருப்பதால் மாட்டுத்தாவணியில் இருந்து காய்கறி வாங்கி வாரச்சந்தையில் விற்பவர்கள் பாதி பேர் கடை வைக்கவில்லை என்றார்.---

மாட்டுத்தாவணியில் காய்கறிகளின் நேற்றைய விலை

கத்தரிக்காய், கண்மாய் கத்தரிக்காய் கிலோ ரூ. 60 - 70 ; வெண்டை 50 - 60, பாகற்காய்70 - 90, புடலங்காய் 30 - 40, உருட்டு மிளகாய், சம்பா மிளகாய் 80 - 100, சீனி அவரை 30 - 50, பீர்க்கங்காய் 60 - 80, சுரைக்காய் 20 - 50, முருங்கை பீன்ஸ் 120 - 150, நைஸ் அவரை 150 - 180, பெல்ட் அவரை 150 - 200, நெல்லிக்காய் 50 - 60, சின்ன வெங்காயம் 50 - 70, பெரிய வெங்காயம் 20 - 35, புதினா 25, கறிவேப்பிலை 40, மல்லி 160, இஞ்சி கிலோ ரூ.160க்கு விற்றது. பட்டை அவரை வரத்து இல்லை.








      Dinamalar
      Follow us