ADDED : ஜூன் 15, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : பொதுத் தேர்வுகளில் 'சென்டம்' தேர்ச்சி பெற்ற மதுரையை சேர்ந்த அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் 70 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கல்வித்துறை சார்பில் சென்னையில் முப்பெரும் விழா நடந்தது. இதில் மதுரையில் இருந்து சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் பத்தாம் வகுப்பில் 45, பிளஸ் 2 வில் 25 அரசு, கள்ளர், மாநகராட்சி, ஆதிதிராவிடர்நலன் பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு சான்று வழங்கினார்.
பிளஸ் 2வில் தமிழில் 100க்கு 100 மதிப்பெண் மாணவி லாவண்யாவுக்கும், 67 வது தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.