/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓராண்டாக திறப்பு விழா காணாத சுத்திகரிப்பு மையம்
/
ஓராண்டாக திறப்பு விழா காணாத சுத்திகரிப்பு மையம்
ADDED : ஜூலை 04, 2024 01:41 AM

மேலுார்: நா.கோவில்பட்டியில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்தும் பயன்பாட்டிற்கு வராததால் மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி வருகிறது.
இக்கிராமத்தில் வசிக்கும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஊராட்சி சார்பில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. உப்பு கலந்த கடினதன்மைமிக்க நீரை, குடிநீராக பயன்படுத்துவதால் பலவித தொற்று நோய்களுக்கு ஆளாகினர்.
அதனால் கடந்தாண்டு ஊராட்சி நிதியில் இருந்து தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்டது.
ஆனால் இதுவரை அது பயன்பாட்டிற்கு வரவே இல்லை.
பெருமாள் என்பவர் கூறியதாவது : புதிதாக போர்வெல் அமைத்து, தண்ணீரை பெற்று, சுத்திகரிப்பு செய்து, மக்களுக்கு வினியோகிக்கவே ரூ.5 லட்சத்தில் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது.
ஆனால் போர்வெல் அமைக்கவில்லை. மையத்திற்கு தண்ணீர் சப்ளை செய்ய தொட்டி கட்டுவதாக கூறுகின்றனர். இதனால் சுத்திகரிப்பு மையம் மட்டும் ஓராண்டாக காட்சிப் பொருளாகி, மக்கள் வரிப்பணம் வீணாகிறது. அதிகாரிகள் சுத்திகரிப்பு மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.
பி.டி.ஒ., உலகநாதன் கூறுகையில், மேல்நிலை தொட்டி கட்டுமான பணிகள் முடிந்ததும் சுத்திகரிப்பு மையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.