/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பத்தாண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாத ரோடு
/
பத்தாண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாத ரோடு
ADDED : ஆக 15, 2024 03:50 AM

திருநகர், : மதுரை திருநகர் அமைதிச்சோலை நகரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாத ரோடுகள் சில நாட்களாக பெய்து வரும் மழையால் சேரும் சகதியமாக மாறிவிட்டது.
அப்பகுதி ஜெயக்குமார், சுப்புராஜ் கூறியதாவது: 95வது வார்டு அமைதிச்சோலை நகரிலுள்ள ரோடுகள் சீரமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. முதல் குறுக்கு தெரு, 4வது மேற்கு தெரு, தெற்கு தெரு, 6வது மேற்கு தெரு ரோடுகள் மண் சாலையாக மாறிவிட்டது. தொடர் மழையால் குண்டும், குழியுமாகி மழை நீர் தேங்கியுள்ளது. அந்த ரோடுகளால் பெரிதும் அவதி அடைகிறோம்.
கடந்த ஆண்டு இந்த ரோடுகள் சீரமைக்க எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்க இருந்த நிலையில், இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதால் தற்போது சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என மாநகராட்சி தெரிவித்தது. இதனால் அந்த நிதி வேறு திட்டத்திற்கு சென்று விட்டது. பாதாள சாக்கடை திட்டம் வருவதற்கான அறிகுறிகள் இதுவரை இல்லை என்றனர்.