
மேலுார்: செமினிபட்டியில் கூத்தன் கண்மாய் மடை உடைந்து பாசன தண்ணீர் வெளியேறியதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
செமினிபட்டியில் 15 ஏக்கர் பரப்பளவிலான கூத்தன்கண்மாய் மேலுார் ஒன்றிய அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. சில தினங்களாக பெய்த மழைக்கு கண்மாயில் தண்ணீர் நிரம்பியது.
அதேநேரம் ஏற்கனவே சிதிலமடைந்த நிலையில் உள்ள கண்மாய் மடை முற்றிலும் உடைந்ததால் தண்ணீர் வெளியேறியது.
விவசாயி சாகுல்ஹமீது கூறியதாவது : தனியார் அறக்கட்டளை நிறுவனத்தினர் கண்மாயை பராமரிக்கும் போது மடைக்கு பாதுகாப்பாக உடைகல்லால் கட்டப்பட்டிருந்த கற்களை எடுத்துச் சென்றனர். அதனால் மடை வலுவிழந்தது.
இது குறித்து கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுத்தபோது, அவர் மடையை கட்டும்படி உத்தரவிட்டார்.
அதிகாரிகள் தாமதப்படுத்தியதால் தற்போது மடை முற்றிலும் உடைந்து கண்மாயில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறி விட்டது.
இத் தண்ணீரை நம்பியிருந்த விவசாயிகள் சாகுபடி செய்யாததால், நிலங்கள் தரிசாக கிடக்கிறது என்றார்.
பி.டி.ஒ., உலகநாதன் கூறுகையில், ''மடை கட்ட திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது விரைவில் கட்டப்படும் என்றார்.