/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிராம சபைக் கூட்டத்தில் புலம்பிய ஆசிரியர்கள்
/
கிராம சபைக் கூட்டத்தில் புலம்பிய ஆசிரியர்கள்
ADDED : ஆக 18, 2024 05:02 AM

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் ஒன்றியம் முடுவார்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் ஜெயமணி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் செல்வம் அறிக்கை வாசித்தார்.
அப்போது எழுந்த விவசாயி அங்கிருந்த 'பிளக்ஸ்'ஐ குறிப்பிட்டு இன்று குடியரசு தினமா, சுதந்திர தினமா என கேட்டார். பின் அங்கு கட்டப்பட்டிருந்த குடியரசு தின பிளக்ஸ் அகற்றப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஆசிரியர்கள் கூறியதாவது:
பள்ளியில் 150 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் தரமற்ற முறையில் அமைத்த 'பேவர் பிளாக்' தளத்தால் தேங்கும் மழைநீரை ஆசிரியர்கள் வெளியேற்றும் நிலை உள்ளது. பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். பழுதடைந்து இடிக்கப்பட்ட வகுப்பறை கட்டடத்தின் வழியாக வரும் சமூக விரோதிகள் மாடியில் மது, கஞ்சா பயன்படுத்தி செல்கின்றனர். காலையில் மதுபாட்டில்களை அப்புறப்படுத்துகிறோம். சுற்றுச்சுவர் கட்டவும், தரமான தரைத்தளம் அமைக்க கிராம சபை கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு வேதனை தெரிவித்தனர். முடுவார்பட்டியில் பஸ் ஸ்டாப் வேண்டுமென கிராமமக்கள் வலியுறுத்தினர்.

