/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிரிப்டோ கரன்சி ஆசையில் பணத்தை இழந்த பெண்
/
கிரிப்டோ கரன்சி ஆசையில் பணத்தை இழந்த பெண்
ADDED : மே 11, 2024 05:57 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்ததாளப்பள்ளி பொன் பார்த்திபன். இவரது மனைவி சரண்யா. இவர், மொபைல் போனில் 'டெலிகிராம் குரூப்'பில் வந்த மெசேஜை பார்த்து, கார்த்திக்குடன் பேசினார். குறைந்த விலைக்கு தன்னிடம் யு.எஸ்.டி.டி., கிரிப்டோ கரன்சி உள்ளதாகவும், அதன் வாயிலாக உங்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என கூறினார்.
இதை நம்பிய சரண்யா, கார்த்திக் கூறிய வங்கி கணக்குக்கு ரூ. 20 லட்சம் அனுப்பினார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சரண்யா, சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். விசாரணையில், சரண்யா அனுப்பிய பணம் ரெனி என்பவரின் வங்கி கணக்கிற்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் ரெனியை விசாரித்ததில், ரெனியும், கார்த்திக்கிடம் இதே போல, 20 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமார்ந்தது தெரிந்தது. சரண்யாவிடம், ரெனியின் வங்கி கணக்குகளை கார்த்திக் கொடுத்ததும் தெரிய வந்தது. ரெனியின் வங்கி கணக்கில் இருந்த 15 லட்சம் ரூபாய் மீட்டு, சரண்யாவிடம்ஒப்படைக்கப்பட்டது.