/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெறுவோர் அதிகம்; தருவோர் குறைவு தேவை ரத்த தான விழிப்புணர்வு
/
பெறுவோர் அதிகம்; தருவோர் குறைவு தேவை ரத்த தான விழிப்புணர்வு
பெறுவோர் அதிகம்; தருவோர் குறைவு தேவை ரத்த தான விழிப்புணர்வு
பெறுவோர் அதிகம்; தருவோர் குறைவு தேவை ரத்த தான விழிப்புணர்வு
ADDED : ஜூலை 05, 2024 05:12 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கி மூலம் தினமும் 200 நோயாளிகளுக்கு ரத்ததானம் வழங்கப்படுவதால் தேவை அதிகமாக உள்ளது.
விபத்தில் அடிபட்டவர்கள், ரத்தப்புற்று நோயாளிகள், ரத்தம் உறைதல் தன்மை இல்லாத மற்றும் கர்ப்பிணிகளுக்கு எந்த நேரத்திலும் ரத்தம் தேவைப்படலாம். தினந்தோறும் ரத்தம் தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் மக்களிடம் தானாக முன்வந்து ரத்த தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு இன்னும் அதிகரிக்க வேண்டும் என்கிறார் மருத்துவமனையின் ரத்தவங்கி துறைத்தலைவர் சிந்தா. அவர் கூறியதாவது:
மாதம் 2000 முதல் 2500 யூனிட்கள் ரத்தம் தானமாக பெறுகிறோம். கல்லுாரிகள், குடியிருப்போர் நலச்சங்கம், தனியார் நிறுவனங்கள் மூலம் முகாம் அமைத்தால் ஒரே நாளில் 100 முதல் 300 யூனிட்கள் ரத்தம் பெறமுடியும். மற்ற நேரங்களில் மருத்துவமனைக்கு வந்து ரத்தம் கொடுப்போர் மிகவும் குறைவு.
வார்டில் நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்பட்டால் அவசரத்திற்கு ரத்தம் ஏற்றலாம். பதிலுக்கு நோயாளிகளின் உறவினர்கள் ரத்ததானம் செய்தால்தான் அடுத்தடுத்து வரும் நோயாளிகளுக்கு தட்டுப்பாடின்றி சேவையை தொடர முடியும். ஆனால் பலர் ரத்த தானம் செய்ய தயங்குகின்றனர்.
ஒருவரிடம் பெறும் ரத்தத்தை அப்படியே மற்றொருவருக்கு செலுத்துவதில்லை. அதில் இருந்து ரத்தத்தட்டுகள், ரத்த சிவப்பணுக்கள், கிரையோ எனப்படும் பிளாஸ்மாவை பிரித்து அவை தேவைப்படுவோருக்கு செலுத்துகிறோம். அதற்கான நவீன கருவிகள் இங்குள்ளன. ரத்த சிவப்பணுக்களை 2 முதல் 8 டிகிரியில் 35 நாட்களும், ரத்த தட்டுகளை 22 டிகிரி வெப்பநிலையில் 5 நாட்கள் வரையும் பாதுகாக்கலாம். பிளாஸ்மாவை உறையவைத்து தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.
ரத்ததானம் தேவைப்படுவோர் 200 பேர் எனில் 50 பேர் கூட தானாக முன்வந்து ரத்ததானம் செய்வதில்லை. ஆரோக்கியமானவர்கள் ஆண்டுக்கு 4 முறை ரத்ததானம் செய்யலாம் என்றாலும் விருப்பப்பட்டு 2 முறையாவது தானம் செய்யலாம். வீட்டு விசேஷம், விழாக்களின் போது உணவு தானம் செய்வதைப் போல குடும்பமாக ரத்ததானம் செய்யும் மனப்பான்மை உருவாக வேண்டும் என்றார்.
வீட்டு விசேஷம், விழாக்களின் போது உணவு தானம் செய்வதைப் போல குடும்பமாக ரத்ததானம் செய்யும் மனப்பான்மை உருவாக வேண்டும்