/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பூசின மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்; மதுரை ரேஸ்கோர்ஸில் அரைகுறை பணிகள்

ADDED : மார் 29, 2024 06:21 AM
மதுரை : கேலோ இந்தியா விளையாட்டுக்காக ஜனவரியில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் செய்யப்பட்ட வேலைகள் அரைகுறையாக முடிந்து பல்லைக்காட்டுகிறது.
பெயின்ட் பூசின மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணும் என்பது போல பார்வையாளர்களுக்கான முன்பக்க காலரி, வலது பக்க காலரியில் பெயின்ட் பூசப்பட்டு பளிச்சென காட்டுகிறது.
அருகிலேயே இடதுபக்கத்தில் உள்ள காலரி சோகத்தின் சுவடாக பெயின்ட் இன்றி காட்சியளிக்கிறது.
இதேபோல பல்திறன் விளையாட்டுக்கான அரங்கு என்று கட்டப்பட்டு தற்போது 4 பாட்மின்டன் அரங்குகள் உள்ள கட்டடத்தின் வெளிப்பக்கத்தில் தரையிலிருந்து பாதியளவு மட்டும் பெயின்ட் அடித்துள்ளனர். மீதி உயர சுவர் பெயின்ட் இன்றி வித்தியாசமாக தெரிகிறது.
டூவீலர், கார் பார்க்கிங் இடங்களும் அரைகுறையாக வேலை செய்யப்பட்டுள்ளது. டூவீலர் பார்க்கிங் பகுதியில் பாதியளவு மட்டும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. கார் பார்க்கிங் பகுதியில் சுவரில் இருந்து பாதியளவு வரை மண் தரையாகவும் அதன் பின் பேவர் பிளாக் கற்கள் பொருத்தப்பட்டு பொருத்தமின்றி காணப்படுகிறது. பெயருக்கு அரைகுறையாக வேலை செய்யாமல் பணிகளை முழுமையாக முடித்தால் தான் ஸ்டேடியம் அழகாக இருக்கும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.