ADDED : ஆக 09, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் தாம்ப்ராஸ் அமைப்பின் சார்பில் உலக நன்மைக்கான திருவாடிப்பூர உற்ஸவம் கிளைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. மாநில மூத்த துணைத் தலைவர் அமுதன் முன்னிலை வகித்தார். கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. ஆண்டாள் அருளிய 30 பாசுரங்கள், வாரணமாயிரம் பாசுரங்கள் படிக்கப்பட்டு திருவாராதனம் செய்யப்பட்டது. அனைவருக்கும் வளையல், பிரசாதம் வழங்கப்பட்டன.
பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், மகளிரணி செயலாளர் ராஜம் மீனாட்சி, செயற்குழு உறுப்பினர் சித்ரா, முன்னாள் தலைவர் ராமநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் ரகுராம், விஜயகோமதி, அன்னம்மா, எஸ்.எஸ்.காலனி கிளை நிர்வாகி வெங்கடாசலம் கலந்து கொண்டனர்.