/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆண்டிபட்டியில் நகமும், சதையுமாய் இருந்தவர்கள் இன்று எதிரும், புதிருமாய்
/
ஆண்டிபட்டியில் நகமும், சதையுமாய் இருந்தவர்கள் இன்று எதிரும், புதிருமாய்
ஆண்டிபட்டியில் நகமும், சதையுமாய் இருந்தவர்கள் இன்று எதிரும், புதிருமாய்
ஆண்டிபட்டியில் நகமும், சதையுமாய் இருந்தவர்கள் இன்று எதிரும், புதிருமாய்
ADDED : மார் 22, 2024 05:00 AM
ஆண்டிபட்டி: முன்னாள் முதல்வர் ஜெ., ஆண்டிபட்டியில் போட்டியிட்ட போது வி.ஐ.பி.,க்களாக வலம் வந்தவர்கள் இன்று அ.தி.மு.க.,விற்கு எதிர் வேட்பாளராக களம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றபின் பதவி இழந்தார்.
மறு தீர்ப்புக்கு பின் 2002ல் ஆண்டிபட்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் முதல்வரானார்.
ஜெயலலிதா போட்டியிடுவதற்கு வசதியாக அப்போது ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.,வாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு பிரதி உபகாரமாக அவர் ராஜ்யசபா எம்.பி.,யானார்.
பின்னர் 2004 லோக்சபா தேர்தலில் தினகரன் வெற்றி பெற்று எம்.பி., ஆனார்.
ஜெயலலிதாவிடம் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி, எம்.பி.,க்கள் ஆன பின் ஆண்டிபட்டி தொகுதிக்குத் தேவையான வளர்ச்சி திட்டங்கள் அனைத்தையும் ஒவ்வொரு கிராமத்திலும் கிடைக்கும்படி ஏற்பாடு செய்தனர். காலச் சூழல், அரசியல் மாற்றங்களால் தற்போது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சோழவந்தான் சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட தேனி தொகுதியில் தினகரன் அ.ம.மு.க., சார்பில் பா.ஜ.,கூட்டணியில் தேனி லோக்சபா தொகுதி வேட்பாளராகவும், தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க.,வேட்பாளராகவும் அ.தி.மு.க., வுக்கு எதிராக தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

