ADDED : மே 28, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
மேலுார்: தாயை அவதுாறு பேசி திட்டியதால் கொலை செய்ததாக சகோதரர்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
வெள்ளமுத்தன்பட்டி ஆக்டிங் டிரைவர் ராஜ்குமார் 33, நேற்று முன்தினம் திருவனேந்தல் கண்மாயில் கல்லால் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இவ் வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த வடமாடு மஞ்சு விரட்டு வீரர்களான சகோதரர்கள் அருள் 25, அருண் 20, நண்பர் நவநீதன் 20, ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் நேற்று முன்தினம் நால்வரும் மது அருந்திய போது சகோதரர்களின் தாயை ராஜ்குமார் தவறாக பேசியதால் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதால் சகோதரர்கள் மற்றும் நண்பன் நவநீதன் உள்ளிட்ட மூவர் கல்லால் தாக்கி ராஜ்குமாரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
