/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓய்வு ஆசிரியர்களின் முப்பெரும் விழாக்கள்
/
ஓய்வு ஆசிரியர்களின் முப்பெரும் விழாக்கள்
ADDED : மார் 15, 2025 05:37 AM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழக பொதுக்குழு, நுால் வெளியீடு, மகளிர் தினம் என முப்பெரும் விழாக்கள் நடந்தன.
பேராசிரியர்கள் ராமமூர்த்தி, ரோஹிணி தலைமை வகித்தனர். பேராசிரியர் ஆனந்தன் வரவேற்றார். பொருளாளர் பெருமாள் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார். பெரியதம்பி செயல் அறிக்கை வாசித்தார். பேராசிரியர்கள் குணவதி, மனோகரன், பார்த்தசாரதி பங்கேற்றனர். தமிழ் இலக்கியம், வாழ்வியல் சம்பந்தமான 10 நுால்களை மகளிர் தினத்தையொட்டி மாவட்ட கருவூல அலுவலர் புனிதாராணி, கூடுதல் அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டனர்.
அரசின் புதிய நடத்தை விதிகளை கண்டிப்பது, கல்வியாளரை கல்லுாரி கல்வி ஆணையராக நியமிக்க வேண்டும், ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் மாநாட்டை மதுரையில் நடத்துவது, கிரிக்கெட் சாம்பியன் கோப்பையை வென்ற இந்திய அணியை பாராட்டுவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மனநல ஆலோசகர் ராணிசக்கரவர்த்தி முதுமைகால வாழ்க்கை குறித்து பேசினார். பேராசிரியர் பெருமாள் நன்றி கூறினார். பேராசிரியர்கள் ஜெகநான், சண்முகசுந்தரம், சுப்ரமணி, செந்தில் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.