ADDED : ஆக 14, 2024 12:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி, : சொக்கலிங்கபுரத்தில் துபராள்பதி அம்மன் கோயில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
ஜூலை 30 முதல் பக்தர்கள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதமிருந்தனர். நேற்று மணல்மேட்டுப்பட்டி விநாயகர் கோயிலில் இருந்து நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்ற பக்தர்கள் பால் குடம் எடுத்து 3 கி.மீ., துாரம் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கிடா வெட்டி பொங்கல் வைத்தனர். பின்னர் அம்மன் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிவகங்கை, திண்டுக்கல் உள்பட பல பகுதியில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.