/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எடையளவு முத்திரை இடுவதற்கு அவகாசம்
/
எடையளவு முத்திரை இடுவதற்கு அவகாசம்
ADDED : ஜூன் 15, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அதுல்ஆனந்த் தெரிவித்துள்ளதாவது: தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும் இணையதள சேவையில் தற்போது வழக்கமான பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இத்துறையின் இணையதளத்தில் எடையளவுகளை முத்திரையிடும் பணிக்கான கால வரம்பு வரும் ஜூன் 30ல் முடிகிறது. இந்நிலையில் இக்காலவரம்பு ஆக.,31 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த காலநீட்டிப்புக்கு எவ்வித கால தாமதக் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்.