ADDED : மே 28, 2024 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை வடக்குமாசி வீதி குருஞானசம்பந்தர் மண்டபத்தில் திருஞானசம்பந்தர்குருபூஜை விழாவை முன்னிட்டு திருமுறைப்பண்ணிசை நிகழ்ச்சி நடந்தது.
அருண்மொழி குழுவினர் நிகழ்ச்சியை வழங்கினர். சுரேஷ்சிவன் வரவேற்றார். தருமையாதீன தம்பிரான் திருஞானசம்பந்த சுவாமிகள் 'திருமுறைகளில் இயற்கை' எனும் தலைப்பில் சைவசமய ஆசியுரை வழங்கினார்.
திருஞானசம்பந்தருடைய வரலாறு, நிகழ்த்தியஅற்புதங்கள் குறித்து அருணகிரி பேசினார். சண்முகநாதன் நன்றி கூறினார். அறக்கட்டளை அறங்காவலர்கள் இளங்கோவன், நாராயணன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.