/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் பஞ்சாமிர்த உரிமம் ரூ.18 லட்சத்துக்கு ஏலம்
/
திருப்பரங்குன்றம் பஞ்சாமிர்த உரிமம் ரூ.18 லட்சத்துக்கு ஏலம்
திருப்பரங்குன்றம் பஞ்சாமிர்த உரிமம் ரூ.18 லட்சத்துக்கு ஏலம்
திருப்பரங்குன்றம் பஞ்சாமிர்த உரிமம் ரூ.18 லட்சத்துக்கு ஏலம்
ADDED : மே 30, 2024 02:09 AM
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்தாண்டு பஞ்சாமிர்தம் விற்பனை 18 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2024ம் ஆண்டு ஜூலை 1முதல் 2025ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை, சில்லரை குத்தகை உரிம பொது ஏலம் நேற்று அழகர் கோவில் கள்ளழகர் கோவில் துணை கமிஷனர் கலைவாணன், திருப்பரங்குன்றம் கோவில் துணை கமிஷனர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில், 15க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி விற்பனை 18 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கும், முடி சேகரிக்கும் உரிமம் 4.25 லட்சம் ரூபாய்க்கும், உயிர் பிராணிகளை சேகரிக்கும் உரிமம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், சரவணப்பொய்கையில் பரிகாரம், பால்குடம், காவடி செலுத்த வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமம் 95 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போனது.