ADDED : ஆக 12, 2024 04:20 AM
மதுரை : த.மா.கா., மதுரை மேற்கு, மத்தி, தெற்கு, வடக்கு மாவட்டங்கள் சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் நிர்வாகிகளுக்கு வழங்கும் விழா மதுரையில் நடந்தது. தலைவர்கள் ராஜாங்கம், நடராஜன் தலைமை வகித்தனர்.
மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் படிவங்களை வழங்கினார். உயர்மட்டக் குழு உறுப்பினர் மலைச்சாமி, மாநில செயலாளர்கள் பைரவமூர்த்தி, மணி, செயற்குழு உறுப்பினர் மீனா மற்றும் இதர நிர்வாகிகள்பங்கேற்றனர். பள்ளி, கல்லுாரிகள் அருகில் போதைப் பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாடிப்பட்டி
சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் பாண்டி தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட தலைவர் பாரத் நாச்சியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ், மாவட்ட துணைத் தலைவர் சிவா முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் பால சரவணன் வரவேற்றார்.

