/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்று வருவாய்த்துறை தினம் கொண்டாட்டம்
/
இன்று வருவாய்த்துறை தினம் கொண்டாட்டம்
ADDED : ஜூலை 01, 2024 06:04 AM
மதுரை, : அனைத்துத் துறைகளுக்கும் தாய்த்துறையான வருவாய்த்துறையின் மாண்பை வெளிப்படுத்த இன்று வருவாய்த்தினம் கொண்டாடப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மாநில தலைவர் எம்.பி. முருகையன், மாவட்ட தலைவர் கோபி கூறியிருப்பதாவது: ஐநுாறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பாரம்பரியமிக்கது வருவாய்த்துறை. இன்றளவும் அனைத்துத் துறைகளுக்கும் தாய்த்துறையாக, அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக உள்ளது. அனைத்து தரப்பினரின் அன்றாட தேவையை பூர்த்தி செய்வதுடன், அரசு திட்டங்களை மேற்கொண்டு வரும் இத்துறையின் மாண்பை கொண்டாடும் வகையில், பசலி ஆண்டின் துவக்கமான இன்று (ஜூலை 1) அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
இதில் ஓய்வு பெற்ற அலுவலர்களை கவுரவிப்பது, சிறந்த பணியாளரை ஊக்குவிப்பது நடைபெறும். இதில் தமிழ்க்கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் வேஷ்டி, சேலை, சீருடை அணிந்து பங்கேற்க வேண்டும். மரக்கன்றுகளம் நடப்படும். இரவு 7:00 மணிக்கு சிறப்பு இணையவழி கருத்தரங்கில் பொதுச் செயலாளர் சங்கரலிங்கம் உட்பட நிர்வாகிகள் பேச உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.