/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்று மாநில கூடைப்பந்து இறுதிப் போட்டிகள்
/
இன்று மாநில கூடைப்பந்து இறுதிப் போட்டிகள்
ADDED : ஜூலை 28, 2024 06:15 AM
திருப்பரங்குன்றம், : மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் நாக் அவுட் முறையில் நடக்கும் மாநில கூடைப்பந்தாட்ட போட்டிகளில் 9வது ஆட்டத்தில் துாத்துக்குடி வ.உ.சி., கல்லுாரி அணியினர் 43 - 33 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் காரைக்குடி அழகப்பா பல்கலை அணியை வென்றனர்.
பத்தாவது போட்டியில் சவுராஷ்டிரா கல்லுாரி அணியினர் 64 -- 34 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லுாரி அணியை வென்றனர்.
11வது போட்டியில் காந்தி கிராம பல்கலை அணி 70 -- 38 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மதுரை தியாகராஜர் கலைக்கல்லுாரி அணியை வென்றது.
12 வது போட்டியில் கோவை பி.எஸ்.ஜி. சி.ஏ.எஸ்., கல்லுாரி அணி 47 -- 25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என். கல்லுாரி அணியை வென்றது.
13வது போட்டியில் வ.உ.சி., கல்லுாரி அணியினர் 59 -- 47 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் கோவை என்.எஸ். இன்ஸ்டிடியூசன் அணியை வென்றது.
14வது போட்டியில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரி அணி 62 -- 43 என்ற புள்ளிகள் கணக்கில் சவுராஷ்டிரா கல்லுாரி அணியை வென்றது.15வது போட்டியில் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரி அணி 61 -- 37 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் காந்திகிராம பல்கலை அணியை வென்றது. இன்று காலை அரை இறுதி, மாலையில் இறுதிப்போட்டி நடக்கிறது.