ADDED : ஏப் 25, 2024 03:56 AM
கோயில்
சித்திரைத் திருவிழா: கள்ளழகர் மோகினி அவதாரத்தில் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளல், காலை 6:00 மணி, ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளல், திருமஞ்சனம், இரவு 11:00 மணி.
காஞ்சி மகா பெரியவா விக்ரகம், வெள்ளி பாதுகைக்கு குருவார புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனை: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
புதிய வளனார் பெருவிழா: புனித வளனார் சர்ச், ஞானஒளிவுபுரம், மதுரை, மறையுரை வழங்குபவர்: கவிராயபுரம் அற்புத குழந்தை இயேசு திருத்தல அதிபர் இஞ்ஞாசி அற்புதராஜ், மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
அகண்டநாமம், ஸத்ஸங்கம்: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 8:00 மணி.
பொது
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவிற்கு பிரிவு உபசார விழா: வழக்கறிஞர்கள் சேம்பர் கட்டடம், உயர்நீதிமன்ற மதுரை கிளை, மதுரை, பிரிவு உபசாரம் அளிப்போர்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரகதிரவன், எம்.பி.ஏ., பொது மேலாளர் வெங்கடேசன், எம்.பி.எச்.ஏ.ஏ., தலைவர் பாண்டிராஜ், டபிள்யூ.ஏ.ஏ., தலைவர் ஆனந்தவள்ளி, மாலை 5:30 மணி.
சித்திரைச் சுற்றுலா கலைவிழா: திருமலைநாயக்கர் மகால், மதுரை, கலாகேந்திரா கலை நிறுவனத்தின் பரதநாட்டியம், காலை 10:00 மணி, மதுரை நாகேஸ்வரனின் கலைத்தாய் கிராமிய பல்சுவை கலைக் குழுவின் கிராமிய கலைநிகழ்ச்சிகள், காலை 11:00 மணி, மதுரை அமிர்தா ரங்கராஜனின் பரதநாட்டியம், மதியம் 12:00 மணி, வெரைட்டி பாலா குழுவின் பல்சுவை கலைநிகழ்ச்சிகள், மதியம் 2:00 மணி, சிவகங்கை கங்கை நாட்டியாலயா மாணவிகளின் பரதநாட்டியம், மதியம் 3:00 மணி, மதுரை சக்தி கார்த்திக் ஆதிபராசக்தி இசைக்குழுவின் கிராமிய பக்தி கலைநிகழ்ச்சி, மாலை 4:00 மணி.
லீட் - கோடைகால முகாம்: சின்மயா மீனாட்சி, 7வது குறுக்குத் தெரு, டோக் நகர், மதுரை, ஏற்பாடு: சின்மயா தேவி குரூப், சின்மயா யுவகேந்திரா, காலை 9:30 மணி.
பள்ளி, கல்லுாரி
எம்.ஏ.வி.எம்.எம். பொறியியல் கல்லுாரி வெள்ளி விழாவுடன் கூடிய ஐம்பெரும் விழா: எம்.ஏ.வி.எம்.எம்., திருமண மாளிகை, புட்டுத்தோப்பு மெயின் ரோடு, மதுரை, தலைமை: முதல்வர் நவநீதகிருஷ்ணன், சிறப்பு விருந்தினர்: பெஸ்ட் மணி கோல்டு சேர்மன் ஜெகநாத் மிஸ்ரா, ஸ்ரீ மீனாட்சி பேன் ஹவுஸ் நிர்வாக இயக்குநர் சரவணன், சாக்ஸ் பிளாசா நிர்வாக இயக்குநர் இளங்கோ, எம்.ஏ.வி.எம்.எம்., சபைத் தலைவர் பாஸ்கரன், காலை 10:00 மணி.
மருத்துவம்
இலவச காது மூக்கு தொண்டை பரிசோதனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

