ADDED : ஆக 01, 2026 06:02 PM
கோயில்
* ஆடி உற்ஸவம்: சந்தனமாரியம்மன் கோயில், சந்தனம் நகர், கண்ணனேந்தல், மதுரை, அன்னதானம், காலை 11:00 மணி.
* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.
* ஆடி 18 கருப்பசாமி திருவிழா: சித்திவிநாயக, செல்வமுத்துக்குமாரசாமி கோயில், ரயில்வே காலனி, மதுரை, காலை 8:00 மணி.
* ஆடிப் பெருக்கு சிறப்பு வழிபாடு: கலிங்குமடை அய்யனார் கோயில், துவரிமான், ஏற்பாடு: சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், ஸ்ரீபூ காலாசார மையம், துவரிமான் கிராம மக்கள், காலை 9:00 மணி.
* ஆண்டு திருவிழா: சீலைக்காரி அம்மன், பெரியகருப்பண்ண சுவாமி, மலையாள கருப்பண்ண சுவாமி, நொண்டி கருப்பண்ண சுவாமி, நாகம்மாள், ராக்காயி அம்மன், கன்னிமூல கணபதி, அழகுமலையான் கோயில், சல்லக்குளம், வாடிப்பட்டி, சீலைக்காரி அம்மன் பெட்டி வைத்து அலங்கரித்து அம்மனை அழைத்து வருதல் மதியம் 3:00 மணி, முளைப்பாரி எடுத்தல், இரவு 7:00 மணி.
* விளக்கு பூஜை: சுவாமி ரமணகிரி ஆசிரமம், குட்லாடம்பட்டி அருவி அருகே, வாடிப்பட்டி, காலை 10:00 மணி.
சங்கடஹர சதுர்த்தி
* முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், வித்தக விநாயகருக்கு மகா அபிஷேகம், காலை 10:00 மணி, தீபாராதனை, மதியம் 12:00 மணி.
* யோக விநாயகர் கோயில், விளத்துார், சிறப்பு பூஜை, மாலை 4:00 மணி.
* சக்தி விநாயகர் கோயில், கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, சிறப்பு பூஜை, மாலை 4:00 மணி.
* செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, சிறப்பு பூஜை, மாலை 4:00 மணி.
* இரட்டை விநாயகர் கோயில், ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகில், மாட்டுத்தாவணி, சிறப்பு பூஜை, மாலை 5:00 மணி.
பக்தி சொற்பொழிவு
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* காயத்ரி மகா யக்ஞம் – ஆண்டு உற்ஸவம்: சத்சங்கம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, காலை 9:00 மணி, கடம் புறப்பாடு, மகா அபிஷேகம், தீபாராதனை, மதியம் 12:30 மணி.
* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் – சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் ‘சத்தர்ஸனம்’ விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள் விளக்கவுரை நிகழ்த்துபவர் – சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.
* அன்னை சாரதா தேவி: நிகழ்த்துபவர் – சுவாமி தயாசாகரானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
* திருக்குறளில் வாழ்வியல்: நிகழ்த்துபவர் – வள்ளியம்மை, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* ஸ்ரீராம மகிமை: நிகழ்த்துபவர் – விமலி, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 மணி.
பொது
* இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (ஐ.என்.டி.யூ.சி.,) மாநில செயற்குழுக் கூட்டம்: ஓட்டல் ராயல் கோர்ட், மதுரை, பங்கேற்பு: செயற்குழு தலைவர் விஷ்ணு பிரசாத், காலை 11:00 மணி.
* இலக்கிய இணையர் பேராசிரியர் மோகன் – நிர்மலா அறக்கட்டளை விருதுகள் வழங்கும் விழா: நியூ காலேஜ் ஹவுஸ், மதுரை, தலைமை: உலகத் திருக்குறள் பேரவை மதிப்புறு தலைவர் கார்த்திகேயன் மணிமொழியன், பேராசிரியர் நிர்மலா மோகன் படைப்புலகம் 75ம் ஆண்டு பிறந்தநாள் ஆய்வுக்கோவை நுால் வெளியிட்டு சிறப்புரை: மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் ராமராஜ பாண்டியன், மாலை 5:00 மணி.
* 6 முதல் 16 வயதுடைய பள்ளி குழந்தைகளுக்கான இலவச மிருதங்கம், ஹார்மோனியம் வகுப்பு: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை.
* 2026–27ம் கல்வியாண்டிற்கான யோகா வகுப்பு தொடக்க விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயலாளர் நந்தாராவ், ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், சிறப்பு விருந்தினர்கள்: மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் ரமேஷ், கே.வி., பள்ளி ஆசிரியர் ரேவதி, காலை 10:00 மணி.
* சவுராஷ்டிர வைதீக ஆன்மிக மாநாடு: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: வீரவநல்லுார் குலசேகர ராமானுஜர் மடம் அறங்காவலர் ராமசுப்பிரமணியன், ஆசியுரை: செண்டலங்கார செண்பக மன்னார் சம்பத்குமார ராமானுஜ ஜீயர் சுவாமிகள், எம்பெருமானார் ரெங்கநாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள், ராம அப்ரமேய ராமானுஜ ஜீயர் சுவாமிகள், சிறப்பு விருந்தினர்: அமைச்சர் நிர்மல்குமார், கேபிசன் எம்.எல்.ஏ., காலை 10:30 மணி.
* ‘சாதனா’ ரவி எழுதிய ‘பொற்கை’ நுால் வெளியீட்டு விழா: ஓட்டல் எம்3 பொடிக், பனகல் ரோடு, செனாய் நகர், மதுரை, வெளியிடுபவர்: கவிஞர் இரா.ரவி, முதல் பிரதி பெறுபவர்: மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் தேர்வாணையர் சண்முகையா, யாதவர் கல்லுாரி செயலாளர் ஆர்.வி.என். கண்ணன், மாலை 6:30 மணி.
* குரு பூர்ணிமா மஹோத்ஸவம்: மதுரை உற்பத்தி கவுன்சில், மஹபூப்பாளையம், மதுரை, ஏற்பாடு: ஸனாதன் ஸன்ஸ்தா, மதியம் 3:00 மணி.
* நட்பை கூட கற்பை போல எண்ணுவோம் – பேச்சுக்கலை பயிற்சி பட்டறை: திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, கருத்துரை: மதுரை இலக்கியப் பேரவை செயலாளர் போத்திராஜன், ஏற்பாடு: சண்சரண் சமூகம், கல்விநல அறக்கட்டளை, காலை 10:30 மணி.
மருத்துவம்
* முதுகு தண்டுவட மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் அஸ்வின் தீபக் ராஜன், மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணி வரை, விளையாட்டு காயங்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
கண்காட்சி
* அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
* உங்க வீடு, உங்க சாய்ஸ் – ஆடி 18ஐ முன்னிட்டு வீடு விற்பனை கண்காட்சி: ஜே.சி.ரெசிடென்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, ஏற்பாடு: எனர்ஜி லிவிங்ஸ்கேப்ஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
