தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி / ஆக. 8க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஆக. 8க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஆக. 8க்குரியது


ADDED : ஆக 07, 2026 07:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2026 07:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

* ஆடி உற்ஸவம்: சமயபுரம் மாரியம்மன் கோயில், மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு, மதுரை, பொங்கல் வைத்தல், காலை 6:00 மணி, தேர்பவனியுடன் பூஞ்சோலைக்கு அனுப்புதல், மாலை 5:00 மணி.

* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.

* கோயில் உற்ஸவம்: வனபத்திர காளியம்மன் கோயில், முரட்டன்பத்திரி, மதுரை, அன்னதானம், காலை 10:00 மணி, முளைப்பாரி, மாவிளக்கு, மாலை 6:00 மணி, கும்மிப்பாட்டு, இரவு 8:00 மணி.

* ஆண்டு திருவிழா: செல்வ விநாயகர், முத்துமாரியம்மன் கோயில், 60 அடி ரோடு, செல்லுார், மதுரை, முளைப்பாரி ஊர்வலம், காலை 8:00 மணி.

* சனிக்கிழமை சிறப்பு பூஜை: கிருஷ்ணன் கோயில், பொன்மேனி, உத்தங்குடி, ஏற்பாடு: உத்தங்குடி யாதவர் மகாசபை, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* தாயுமானவர்: நிகழ்த்துபவர் – சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் – சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் ‘சத்தர்ஸனம்’ விளக்கவுரை, காலை 9:15 மணி.

* பகவத்கீதை: நிகழ்த்துபவர் – சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

* பகவத்கீதை – அத்தியாயம் 3: நிகழ்த்துபவர் – கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. 

பள்ளி, கல்லுாி

* கேம்பஸ் பஸ் – பெண்கள், குழந்தைகளுக்கான ஷாப்பிங்: பாத்திமா கல்லுாரி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 4:00 மணி வரை.

* விளையாட்டு விழா: மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளி, திருமங்கலம், தலைமை: தாளாளர் சிங்காரவேல், சிறப்பு விருந்தினர்: மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் ரமேஷ், காலை 8:00 மணி.

* விளையாட்டு விழா: எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, நாகமலை புதுக்கோட்டை, தலைமை: சென்னை எஸ்.பி.ஐ.ஓ.ஏ., கல்வி அறக்கட்டளை தலைவர் நிதிஷ் அந்திரேய ராஜா சிங், சிறப்பு விருந்தினர்: மாவட்ட எஸ்.பி., தேவநாதன், காலை 8:30 மணி, ஆண்டு விழா, சிறப்பு விருந்தினர்: சென்னை வருவாய் நிர்வாக உதவி கமிஷனர் ராஜேஸ்வரி சுவி, மாலை 5:30 மணி.

* பிளஸ் 1, பிளஸ் 2 – காமர்ஸ் மாணவர்களுக்கான பள்ளிகளுக்கு இடையேயான பேச்சு, க்விஸ், நடனப் போட்டிகள்: பாத்திமா கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: பி.காம் (ஹானர்ஸ்) துறை, காலை 10:00 மணி.  

பொது

* நல்லாசிரியர்கள் விருதுக்கான சாதனை பரிசளித்தல், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தல், கல்வி உதவித்தொகை வழங்குதல் – முப்பெரும் விழா: தி டி.வி.எஸ்., பள்ளி, டி.வி.எஸ்., நகர், மதுரை, தலைமை: நிர்வாக அறங்காவலர் ரங்கராஜன், சிறப்பு விருந்தினர்: நரம்பியல் டாக்டர் ராமசுப்பிரமணியன், பங்கேற்பு: வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, ராமகிருஷ்ணன், அறங்காவலர் அமுதன், ஏற்பாடு: சுப்பிரமணிய பாரதி அறக்கட்டளை, மாலை 6:30 மணி.

* செவிலியர்கள் அடையாள போராட்டம்: செவிலியர்கள் விடுதி, அரசு மருத்துவமனை வளாகம், மதுரை, பங்கேற்பு: மாநில துணைத் தலைவர் அமுதா, ஏற்பாடு: அரசு நர்சுகள் சங்கம் மாவட்ட கிளை, காலை 7:00 மணி. 

* காந்திய அணுகுமுறையில் சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகம் – காந்திய சிந்தனை கருத்தரங்கம்: காந்தி நிகேதன் ஆசிரமம், தே.கல்லுப்பட்டி, தலைமை: டில்லி தேசிய காந்தி மியூசியம் இயக்குநர் அண்ணாமலை, சிறப்பு விருந்தினர்: அமைச்சர் விஸ்வநாதன், எம்.பி., மாணிக்கம் தாகூர், ஏற்பாடு: மதுரை காந்தி மியூசியம், காந்திய சிந்தனைக் கல்லுாரி, காலை 10:30 மணி.

* மன்றச் செயலாளர் அழகுராஜ் பிறந்தநாள் அறக்கட்டளை விழா: மதுரை திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், மதுரை, தலைமை: தமிழால் இணைவோம் உலகத் தமிழ் பேரியக்க ஆளுநர் சரஸ்வதி, திருக்குறள் வகுக்கும் ‘விதியும் – மதியும்’ சொற்பொழிவு நிகழ்த்துபவர்: மன்றத் தலைவர் ராஜேந்திரன், மாலை 4:30 மணி.

* நரம்பியல், உளவியல் சுகாதாரத் துறையில் செவிலியப் பணிச் சிறப்பு குறித்து கருத்தரங்கு: பைபிள் பவன், பொன்மேனி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மதுரை மருத்துவக் கல்லுாரி முன்னாள் டீன் ரத்தினவேல், சிறப்புரை: டாக்டர்கள் மீனாட்சி சுந்தரம், ஏஞ்சலா, உளவியலாளர் அன்டிபஸ், ஏற்பாடு: பெத்ஷன் சிறப்பு பள்ளி, காலை 9:30 மணி.

* ஹைக்கூ கவிதைகள் – கருத்தரங்கு: அர்பன் ஸ்பைஸ் கேலரி, கே.கே.நகர், மதுரை, சிறப்பு விருந்தினர்: கவிஞர் இரா.ரவி, ஏற்பாடு: புக் கில்டு ஆப் மதுரை, மாலை 6:00 மணி.

* முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் விழா: வீரகாளியம்மன் கோயில், எம்.எம்.சி., காலனி, மதுரை, தலைமை: அமைச்சர் நிர்மல்குமார், ஏற்பாடு: அவனியாபுரம் மேற்கு 1ம் பகுதி, இரவு 7:30 மணி.

* எஸ்.டி.பி.ஐ., தலைவர்கள் சங்கமம்: ஜே.எப்.ஏ., லக்கி பேலஸ், உத்தங்குடி, தலைமை: மதுரை மண்டல செயலாளர் முஜிபுர் ரஹ்மான், சிறப்பு விருந்தினர்: எஸ்.டி.பி.ஐ., தேசிய தலைவர் பைஜி, மாநில தலைவர் முபாரக், தேசிய பொதுச் செயலாளர் அப்துல் மஜீத் பைஸி, பொருளாளர் அப்துல் சத்தார், மதியம் 1:00 மணி.

மருத்துவம்

* முதுகு தண்டுவட மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் அஸ்வின் தீபக் ராஜன், மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணி வரை, விளையாட்டு காயங்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

கண்காட்சி

* சிட்கான் – வர்த்தக கண்காட்சி: அருணாச்சலம் கமலாம்பாள் அரங்கம், காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், காலை 9:30 முதல் இரவு 9:00 மணி வரை.

* தி இன்டர்நேஷனல் ஒலிம்பியன் சர்க்கஸ்: ராஜா முத்தையா மன்றம், மதுரை, காலை 11:00 மணி, மதியம் 2:00 மணி, மாலை 4:30 மணி, இரவு 7:30 மணி. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us