sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி - மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி - மதுரை

இன்றைய நிகழ்ச்சி - மதுரை

இன்றைய நிகழ்ச்சி - மதுரை


ADDED : ஜூலை 15, 2024 05:29 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

ஆடிப் பெருந்திருவிழா 3ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், சுந்தரராஜபெருமாள் தங்கப் பல்லக்கில் எழுந்தருளல், காலை 7:00 மணி, அனுமார் வாகனத்தில் எழுந்தருளல், மாலை 5:00 மணி.

வள்ளி, தெய்வானை, கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம், சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி.

வள்ளி, தெய்வானை, கல்யாண சுப்ரமணியருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.

காளியம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளியம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், காலை 6:00மணி. முருகனுக்கு பூஜை: காலை 7:00 மணி.

சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவணப் பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.

சொக்கநாதருக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.

பக்தி சொற்பொழிவு

108 திவ்ய தேச வைபவம்: நிகழ்த்துபவர் - தென்திருப்பேரை அரவிந்த் லோச்சனன் சுவாமி, மதன கோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணி.

சுவாமி சிவானந்தரின் மகா ஆராதனை விழாவை முன்னிட்டு 'காந்தியடிகளும், சிவானந்தரும்' - ஆன்மிக தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - யாழ் சந்திரா, பழைய திருக்கல்யாண மண்டபம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரை தெய்வநெறிக் கழகம், மாலை 6:00 மணி முதல்.

சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

சதஸ்லோகி: நிகழ்த்துபவர் - கிருஷ்ண மூர்த்தி, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பொது

காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தல்: அவனியாபுரம் பஸ் ஸ்டாண்ட், மதுரை, தலைமை: மதுரை மாவட்ட ஜனதாதள தலைவர் ஜெயப்பிரகாசம், சிறப்புரை: தமிழக மதச்சார்பற்ற ஜனதாதளம் பொதுச் செயலாளர் செல்லப்பாண்டி, ஏற்பாடு: மதுரை மாவட்ட மதச்சார்பற்ற ஜனதாதளம், காலை 9:00 மணி, விளக்குத்துாண், மதுரை, காலை 10:00 மணி.

எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில் பழைய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி போராட்டம்: ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயில், மதுரை, தலைமை: எஸ்.ஆர்.எம்.யூ., மதுரை கோட்டத் தலைவர் செந்தில்குமார், மதியம் 12:00 மணி.

காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கொடியேற்றம்: நவநீத கிருஷ்ணன் கோயில் முன், பந்தடி 5வது தெரு, மதுரை, கொடியேற்றுபவர்: போலீஸ் ஸ்பெஷல் இன்ஸ்பெக்டர் அமலநாதன், காலை 10:00 மணி, இனிப்பு பொங்கல் வழங்குதல், காலை 11:00 மணி, ஏற்பாடு: பந்தடி, மகால் பகுதி பொது மக்கள், அன்னதானம், மதியம் 12:00 மணி.

கல்வி வளர்ச்சி நாள் விழா: டாக்டர் டி. திருஞானம் துவக்கப்பள்ளி, மதுரை, காமராஜர் பிறந்தநாளையொட்டி விழா, முன்னிலை: தலைவர் சுரேந்திரன் பாபு, சிறப்பு விருந்தினர்: ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாசன், பங்கேற்பு: பள்ளிப் பொருளாளர் ஜெயராஜ், ரோட்டரி கிளப் ஆப் மதுரை துணை ஆளுநர் ராஜேஸ்கண்ணா, ஏற்பாடு: ரோட்டரி கிளப் ஆப் மதுரை, காலை 10:30 மணி.

காமராஜர் பிறந்தநாள் விழா: காமராஜர் திடல், கரும்பாலை, மதுரை, காலையில் விளக்குத்துாண் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு, மாணவர்களுக்கு நோட் புக் வழங்குதல், ஏற்பாடு: கரும்பாலை நாடார் உறவின்முறை, இளைஞர் பேரவை, மகளிரணி, மாலை 6:00 மணி,

பள்ளி, கல்லுாரி

திறன் மேம்பாட்டு பயிற்சி: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, தலைமை: முதல்வர் ராமசுப்பையா, பேசுபவர்: சுகன்யா, உதவி பேராசிரியர், பாத்திமா கல்லுாரி, ஏற்பாடு: வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை, நேரம்: காலை 11:50 மணி.

காமராஜர் பிறந்தநாள் விழா: விருதுநகர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி, பழைய குயவர்பாளையம் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி முதல்வர் (பொ) கவிதா, மதியம் 2:30 மணி.

காமராஜரின் சாதனைகள், பண்பின் பெட்டகம் காமராஜர் - பேச்சுப் போட்டி: சவுராஷ்டிரா கல்லுாரி, பசுமலை, மதுரை, தலைமை: முதல்வர் ஸ்ரீநிவாசன், சிறப்பு விருந்தினர்: ஆங்கில உதவிப் பேராசிரியர் கணேசன், ஏற்பாடு: நாட்டு நலப்பணி, தமிழ்த் துறை, காலை 10:00 மணி.

காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல்: மனோகரா நடுநிலைப்பள்ளி, செல்லுார், மதுரை, பங்கேற்போர்: லயன்ஸ் கிளப் கவர்னர் சண்முகசுந்தரம், பள்ளித் தாளாளர் பால் ஜெயக்குமார், ஏற்பாடு: குறிஞ்சி மலர் அரிமா சங்கம், இணைந்த கைகள் சமூக சேவை அமைப்பு, காலை 10:00 மணி.

யோகா, தியானம்

கர்ப்பிணிகளுக்கு இலவச யோகா பயிற்சி: தாஜ் மருத்துவமனை, கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் 11:00 மணி வரை.

மருத்துவம்

இலவச கண் பரிசோதனை முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட்ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.






      Dinamalar
      Follow us