தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 19 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 19 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 19 க்குரியது


ADDED : ஜூலை 18, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2026 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

* ஆடி முளைக்கொட்டுத் திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் பவனி, இரவு 7:00 மணி.

* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.

* ஆடித்திருவிழா: முத்துமாரியம்மன் கோயில், ஊருணிக்கரை, அனுப்பானடி, மதுரை, பூப்பல்லக்கில் அம்மன் வீதியுலா, மாலை 6:00 மணி.

* கோயில் உற்ஸவம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், புட்டுத்தோப்பு ரோடு, மதுரை, அன்னதானம், காலை 11:00 மணி.

* வளர்பிறை சஷ்டி விழா: தங்கமய முருகன் கோயில், விளத்துார், பால்குடம் எடுத்தல், சுவாமிக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மாலை 5:00 மணி, அன்னதானம், மாலை 6:00 மணி. 

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.

* ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* ராம – ராவண யுத்தம், ஸ்ரீராம பட்டாபிஷேகம் – கம்பராமாயண தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் – திருச்சி கல்யாணராமன், மஹா பெரியவர் கோயில், வ.உ.சி., தெரு, ஆனையூர் மெயின் ரோடு, கூடல்நகர், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:30 மணி.

* ராமகிருஷ்ணரின் வாழ்வும், வாக்கும்: நிகழ்த்துபவர் – சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ணமடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் – சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் ‘சத்தர்ஸனம்’ விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள் விளக்கவுரை: நிகழ்த்துபவர் – சுவாமி சமானந்தர் இரவு 7:00 மணி.

* ஞான உலா: நிகழ்த்துபவர் – கணேசன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பொது

* சண்முக திருக்குமரன் எழுதிய ‘நெஞ்சில் விழுந்த நிலா’, ‘எண்பத்தொரு ஏணிப்படிகள்’ நுால்கள் வெளியீட்டு விழா: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, தலைமை: தேவகி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் நாகேந்திரன், வெளியிடுபவர்: எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் சண்முகம், ஏற்பாடு: சண்சரண் சமூகம், கல்விநல அறக்கட்டளை, மதுரை இலக்கியப் பேரவை, காலை 9:00 மணி.

* பொழிலன் தொகுத்துள்ள தேவநேயப்பாவாணர் வரலாற்றுச் சுவடுகள் – நுால் அறிமுக விழா: மணியம்மை மழலையர் தொடக்கப் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: பூங்குன்றனார், பங்கேற்பு: மன்றத் தலைவர் வரதராஜன், நான்காம் தமிழ்ச்சங்கம் செயலாளர் மாரியப்பமுரளி, மதுரைத் திருவள்ளுவர் கழகம் மதிப்பியல் தலைவர் விஜயராஜன், உலகத் திருக்குறள் பேரவை செயலாளர் அசோக் ராஜூ, நுால் வெளியீடு: அருளியார், ஏற்பாடு: புரட்சிப் பாவலர் மன்றம், மாலை 5:00 மணி.

* காமராஜர் பிறந்தநாள் விழா: பத்ரகாளியம்மன் கோயில், திருப்பரங்குன்றம், தலைமை: வேட்டையார், காமராஜர் படம் திறந்து வைத்து சிறப்புரை: விஜயலட்சுமி வேஸ்ட் காட்டன் இண்டஸ்ட்ரிஸ் கருணாகரன், ஏற்பாடு: திருப்பரங்குன்றம் வட்டார ஹிந்து நாடார்கள் உறவின்முறை மாலை 5:00 மணி.

* மதச்சார்பற்ற ஜனதாதளம் மாநகர் தலைவர் ஜெயப்பிரகாசம் நினைவஞ்சலி: எம்.கே.எஸ்., இல்லம், பி.பி.ரோடு, பாலரெங்காபுரம், மதுரை, தலைமை: மாநில முதன்மை தலைமை பொதுச் செயலாளர் செல்லப்பாண்டி, சிறப்பு விருந்தினர்: மாநிலத் தலைவர் பொன்னுசாமி, காலை 10:00 மணி.

* நத்தம் முளையூர் பெருமாள் கோயில் காடு பசுமை வளாகத்தில் மரங்கள் அறியும் பயணம்: மாவட்ட வன அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை, ஏற்பாடு: மதுரை கிரீன், தானம் அறக்கட்டளை, மதியம் 2:00 மணி.

* 6 முதல் 16 வயது குழந்தைகளுக்கான இலவச மிருதங்கம், ஹார்மோனியம் வகுப்பு: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை.

* கலைநகர் விரிவாக்கம் பல்லவி நகர் சங்க மாதாந்திர கூட்டம்: சங்க கட்டடம், பல்லவிநகர் 7வது தெரு, கலைநகர், மதுரை, தலைமை: சங்க பொதுச் செயலாளர் குமரகுருபரன், காலை 11:00 மணி.

* மதுரை அஞ்சல் தலை, நாணயங்கள் சேகரிப்போர் சங்கம் மாதாந்திர கூட்டம்: மதுரை கல்லுாரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுரை சிறப்புரை: தலைவர் சுவாமியப்பன், காலை 10:30 மணி.

விளையாட்டு

* ராஜாமணி, கனகமணி அம்மாள் நினைவுக் கோப்பை மாநில அளவிலான ஹாக்கி போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப், மாலை 4:00 மணி.

மருத்துவம்

* நிறுவனர் டாக்டர் மனோரமா பிறந்த மாதத்தை முன்னிட்டு குழந்தையில்லா தம்பதிக்கான மருத்துவ முகாம்: சுமதி கருத்தரித்தல் மையம், சுமதி மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.

கண்காட்சி

* யுனைடெட் பில்ட் எக்ஸ்போ – கட்டுமான கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: யுனைடெட் டிரேட் பேர்ஸ் இந்தியா, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

* அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

* மான்சரோவர் – ஆடவர் ஆடைகள் தள்ளுபடி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர் மெயின் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us